Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் 2 மாவட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு 30 சதவீதம்

IMG_ORG_1595171655723

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது: கரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ளூர் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் வகையில் 2020 - 21 ஆம் ஆண்டில் திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு ஒட்டுமொத்த பி.டெக்.
பட்டப்படிப்பில் 30 சதவீதத்தை சாஸ்த்ரா ஒதுக்கீடு செய்கிறது. சாஸ்த்ராவில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு தலா 10 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 2020 - 21 ஆம் ஆண்டில் மட்டும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து விண்ணப்பித்துள்ள மாணவர்களில் தகுதியின் அடிப்படையில் சேர்ப்பதற்காகக் கூடுதலாக 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிறுவன தர வரிசைப் பட்டியலில் இந்திய அளவில் முதல் 25 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ள சாஸ்த்ராவில் படிக்க உள்ளூர் மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இப்பல்கலைக்கழகத்தில் பி.டெக். மற்றும் சட்டவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி இரவு 9 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் நாள் மற்றும் நேரம் முடிந்து 4 மணிநேரத்துக்குள் இப்பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதுவரை மாணவர்கள் www.sastra.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு மற்றும் சேர்க்கைகள் இணையவழியில் நடத்தப்படவுள்ளதால், மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வரத் தேவையில்லை.


தற்போது இறுதிப் பருவத் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையவழியில் திங்கள்கிழமை (ஜூலை 20-ம் தேதி) வெளியிடப்படவுள்ளது. இதேபோல, 2020 - 21 ஆம் கல்வியாண்டுக்கான இணையவழி வகுப்புகள் ஆக. 10-ம் தேதி முதல் தொடங்கப்படும். புதுமுக மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு தொடங்கப்படும். இதனிடையே, இணையவழியில் இணைப்புப் பாடம் நடத்தப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive