கர்நாடாக மாநிலத்தில் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு கொரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்தநிலையில், பல மாநிலங்கள் 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அறிவித்தன. ஆனால், பல எதிர்ப்புகளுக்கு மத்திய கர்நாடாக அரசு பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியது.
ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதிவரை பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘7.60 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர். அதில், 14,745 பேர் தேர்வு எழுதவரவில்லை. 3,911 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்வு எழுதவரவில்லை. 863 பேர் உடல்நிலை சரியில்லாமல் தேர்வு எழுதவரவில்லை.
நேற்று, பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...