உலக யோகா (Yoga) தினத்தையொட்டி மாணவர்களுக்கான விநாடி - வினா (Quiz) NCERT சார்பில் ஆன்லைனில் நடக்கிறது
உலக யோகா தினத்தை முன் னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விநாடி -
வினாவை ஆன்லைனில் என்சிஇஆர்டி நடத்துகிறது. ஆண்டுதோறும் உலக யோகா தினத்தை
முன்னிட்டு ‘யோகா ஒலிம்பியாட்’ என்ற யோகா போட் டியை தேசிய கல்வி ஆராய்ச்சி,
பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) 2016-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், உலக யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனாவால்,
இந்த ஆண்டுக் கான போட்டியை விநாடி - வினா வாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது.
‘உடல்நலம் மற் றும் நல்லிணக்கத்துக்கான யோகா’ என்ற தலைப்பில் இப் போட்டி
நடத்தப்படுகிறது. யமா, நியமா, ஷட்கர்மா /கிரியா, ஆசனங்கள், பிராணா யாமா, தியானம்
பந்தா, முத்ரா உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
வரும் 21-ம்
தேதி முதல் ஜூலை 20 வரை போட்டி நடைபெறும். 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவி கள்
பங்கேற்கலாம். மேலும் விவரங்களை http://www.ncert.nic.in-ல் தெரிந்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...