‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் - ‘எக்ஸ்குவிஸ்’ சார்பில் ‘குவிஸ்’ போட்டியில்
வெற்றிபெற வழிகாட்டி முகாம் ஆன்லைனில் ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘எக்ஸ்குவிஸ்’ உடன் இணைந்து நடத்தும் ‘குவிஸ்
போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி?’ எனும் ஆன்லைன் வழிகாட்டி முகாம் வரும் 20-ம்
தேதி தொடங்குகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாண
வர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக
முன்னெடுத்து வருகிறது.விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்கிற ஆர் வம் மாணவர்களுக்கு
இருக்கும். ஆனால், அப் போட்டிக்கு எப்படி தயாராவது, வெற்றி பெறுவதற் கான வழிமுறை
என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவர்களுக்குள் எழும். இந்தக்
கேள்விகளுக்கான பதில்களைத் தருவதோடு, மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலை
யும் வழங்கும் விதமாக ‘குவிஸ் போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி?’ எனும் முகாமை
ஆன்லைன் மூலம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்குகிறது.இம்முகாம் ஜூன் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடக்க
உள்ளது. 5-ஆம் வகுப்பு மாணவ-மாணவி கள் தொடங்கி அனைவரும் இம் முகாமில்
பங்கேற்கலாம். ‘எக்ஸ்குவிஸ்’ நிறுவனர் அரவிந்த் ராஜீவ், மாணவ, மாணவி களுக்கு
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க விருக்கிறார்.
இவர் நாடு முழு வதும் 225-க்கும் மேற்பட்ட விநாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்தி
யுள்ளார். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்லூரி கள், பள்ளிகளிலும்
விநாடி-வினா நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இதில் பங்கேற்க விரும்பும் மாணவ,
மாணவிகள் பதிவுக் கட்ட ணமாக ரூ.294 செலுத்தி,
https://connect.hindutamil.in/quiz.php
என்ற லிங்கில் பதிவுசெய்து கொள் ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 9003966866 என்ற
செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...