Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Covid-19 தன்னம்பிக்கை - கவிதை

        Dr.J.komalalakshmi
தன்னம்பிக்கை
நம் மீது நாம் கொள்ளும் அன்பு! தன்னம்பிக்கை
நம் மீது நாம் கொள்ளும்ஆர்வம்! தன்னம்பிக்கை
நமக்கு நாமே செய்யும் சேவை! தன்னம்பிக்கை 
நமக்கு நாமே தரும் பரிசு! தன்னம்பிக்கை
சவால்
வறுமையும் ,வியாதியும்,வலிகளும், பயமும் 
மரணமும் ,மனத்தளர்ச்சியை,
மனிதனுக்கு சவாலாய் தந்து ,சிரிக்கும்பொழுது,
சவாலை சந்திக்கவும் வெற்றிகொள்ளவும் உதவும் கை
தன்னம்பிக்கை
சோர்வுக்கு சோறூட்டும் சவால்
பிறரோடு சேர்ந்து நிற்பது அவசியம்-ஆனால்
பிறரை சார்ந்து நின்றால் சோர்ந்து விடுவோம்!
சோர்விற்கு கடவுளோ காலமோ காரணமல்ல!!
கடவுளோ காலமோ மருந்துமல்ல
காரணத்தையோ ,காலத்தையோ சார்ந்திராமல்
காரணமின்றி காரணம் தேடி,காலம் கடத்தாமல்
உற்சாகத்தையும் உள்ளார்ந்த பேராற்றாலாய்
உவகையையும் உடனடியாக அல்ல
படிப்படியாக பகிர்ந்தளிக்கும் கை  தன்னம்பிக்கை

நம்மால் முடியும்
நம்மால் மட்டுமே முடியும் என்று உள்ளிருந்து உண்மையினை 
உரக்க சொல்லி உயிரூட்டும் கை !தன்னம்பிக்கை!

வெளியே வரும் பேரிரைச்சலை விட்டுவிட்டு
உள்ளேயிருந்து வரும் உயிராற்றாலான தன்னம்பிக்கையினை   
சவால்கள்  சிதைக்காமல் 
சிரஞ்சீவியாக  வாழவைக்க 
பங்களிக்கும் கை !தன்னம்பிக்கை
DR.J.KOMALALAKSHMI




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive