பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,
ஆசிரியர்- ஆசிரியைகள் இன்று முதல் பள்ளிக்கு அவசியமாக செல்ல வேண்டியதில்லை. எனினும் அவ்வப்போது கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்தால் அல்லது தலைமை ஆசிரியரால் ஏதேனும் முக்கிய பணிகள் வழங்கப்படும் பொழுது ஆசிரியர்- ஆசிரியைகள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவசியம் பள்ளிக்கு வரவேண்டும்.
குறிப்பாக 2020-2021 ஆம் கல்வியாண்டிற்குரிய கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பணி சார்ந்தோ அல்லது பள்ளி மராமத்து பணி சார்ந்தோ அழைப்பு விடுக்கும் பொழுது ஆசிரியர்- ஆசிரியைகள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்.
அரசு பொதுத்தேர்வு சார்ந்து ஒத்துழைப்பு நல்கிய தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள், ஆசிரியர்- ஆசிரியைகள் மற்றும் அனைத்துவகை பள்ளி அலுவலக பணியாளர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
- முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...