எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களுக்கு
உள்மதிப்பீடு அடிப்படையில் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு
பதிவாளர் என்.சேதுராமன் அறிவிப்பு
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்மதிப்பீடு அடிப்படையில் இறுதி
செமஸ்டர் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என பதிவாளர் என்.சேதுராமன்
தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் மாதம்
முதல் விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன. செமஸ்டர் தேர்வுகள் எப்படி
நடத்தப்படும்? தேர்வு முடிவு எப்படி வெளியிடப்படும் என்பது குறித்து
மாணவர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.
நோய்த் தொற்றின் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால் மாணவர்களால் தற்போது
வரை தேர்வை எழுத முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில், இதனை கருத்தில் கொண்டு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
தங்களுடைய மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவை உள்மதிப்பீடு
அடிப்படையில் வெளியிட இருக்கிறது.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் என்.சேதுராமன்
‘தினத்தந்தி‘ நிருபரிடம் கூறியதாவது:-
இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு
கொரோனா நோய்த்தொற்றின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இறுதி
செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற
உள்மதிப்பீடு அடிப்படையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிட
திட்டமிடப்பட்டு இருக்கிறது. இது பி.டெக்., எம்.டெக்., எம்.ஆர்க்., பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்.,
பி.பி.ஏ., எம்.பி.ஏ. போன்ற படிப்புகளில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத உள்ள
மாணவர்களுக்கு பொருந்தும்.
அதுகுறித்த செயல்முறைகள், மதிப்பீட்டுக்கான விதிமுறைகள் பல்கலைக்கழக
இணையதளத்தில் வருகிற 22-ந்தேதி வெளியிடப்படும். அனைத்து அரியர்
தேர்வுகளுக்குமான முடிவு பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...