கோடை காலத்தில் சுடுதண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதா?
சுடுதண்ணீர் அல்லது இளஞ்சூடான தண்ணீர் குடிப்பதால் நாள் முழுவதும்
பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன . சுகாதாரத்துறை மற்றும் உடற்பயிற்சி
நிபுணர்கள் சுடுதண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கும், உடலை கட்டுக்கோப்பாக
பேணுவதற்கும் சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், வெயில்
காலத்தில் இளஞ்சூடான தண்ணீர் அருந்துவது தாகத்தை கட்டுப்படுத்தாது. போதிய
அளவு தண்ணீர் குடிக்கவில்லையெனில், அது நீரிழப்பிற்கு வழிவகுக்கும் .சிறுகுடல் நம் உணவு மற்றும் தண்ணீர் மூலம் உட்கொள்ளும் அனைத்து
தண்ணீரையும் எடுத்துக்கொள்ளும். தண்ணீர் குடிப்பது நாம் உட்கொள்ளும் உணவை
எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. பிரிட்ஜில் வைத்து குளிர்விக்கப்பட்ட தண்ணீர்
உடலுக்கு கேடு விளைவிக்கிறது.
தண்ணீர் குடிப்பது நல்ல ஜீரணத்திற்கு உதவி, மலச்சிக்கலைப்போக்குகிறது.
சுடுதண்ணீர் அல்லது இளஞ்சூடான தண்ணீர் குடிப்பதால் ரத்த குழாய்களை
விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தசைகளுக்கு ஓய்வளித்து,
வலிகளை குறைக்கிறது. உங்களுக்கு தசைகளில் புண் அல்லது வலி இருந்தால், அதை
சரிப்படுத்த சுடுதண்ணீர் குடிப்பது மிகவும் உதவும். சாதாரண காய்ச்சல்
மற்றும் சளியை எதிர்த்து சுடுதண்ணீர் போராடுகிறது. சைனசால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கொடுக்கிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...