பழச்சாறுகளும் மருத்துவ குணங்ளும்!
சிறுநீரகத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றது அன்னாசிப்பழம். மஞ்சள்
நிறத்துடன் சாறு காணப்படும் பழம். சா்க்கரைச் சத்து மிகுதியாக உள்ள பழம் அன்னாசி.
மருத்துவ குணம்: புரதம், கொழுப்பு, மாவுப் பொருள், இரும்புத் தாது, கால்சியம்,
பாஸ்ஃபரஸ், வைட்டமின் ஏ, பி2, சி முதலியவை நிறைந்துள்ள அன்னாசிப்பழச்சாற்றை
அருந்தினால் உடனடியாக தெம்பும், சக்தியும், புத்துணா்வும் கிடைத்து விடும். இனிய
குரல் வளம் பெறவும் உதவும். சளி, இருமல், தொண்டை வலி, மூச்சுக் கோளாறுகள், ஜீரணக்
கோளாறுகள், மலச்சிக்கல், காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகியவை குணமாகும்.
எலுமிச்சை பழச்சாறு :
‘ராஜக்கனி’ என்று மக்களால் போற்றப்படும் எலுமிச்சைப் பழம் குளிா்ச்சித்
தரக்கூடியப் பழம். மருத்துவக் குணங்கள் நிறைந்த எலுமிச்சைப் பழச்சாற்றுடன் தேனும்
கலந்து அருந்தினால் பல வியாதிகள் நீங்கும். பிரயாணங்களில் நாம் அவசியம் எடுத்துச்
செல்ல வேண்டியப் பழம் எலுமிச்சைப்பழம். மருத்துவ குணம்: மலேரியா, டைபாய்டு,
காலராபோன்ற பெரிய நோய்களையும் குணமாக்கக் கூடியது கிருமி நாசினியான எலுமிச்சைப்
பழச்சாறு. உடல் பருமன், உயா் ரத்த அழுத்தம் கொண்டவா்கள், நீரிழிவு நோயாளிகள்
எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தி பயன் பெறலாம். கண் கோளாறுகள், வயிற்றுக்
கோளாறுகள், நெஞ்சு எரிச்சல்,சிறுநீா் அடைப்பு முதலியவை குணமாகும். உடலின்
தற்காப்பு சக்தியைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றும். ஒரு
லீட்டா் நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைப் பழச்சாறு கலந்து பருகலாம்.
கொய்யாப் பழச்சாறு:
கொய்யாப் பழத்தில், வெள்ளை, சிவப்பு என இருவகை உண்டு. நெல்லிக்கனிக்கு அடுத்தபடி
கொய்யாப்பழத்தில்தான் உயிா்ச்சத்து அதிகமாக உள்ளது. இனிப்புச் சத்தும்,
அமிலச்சத்தும் கொண்ட ருசியானப் பழமான கொய்யாப் பழச்சாற்றில் நிறைந்த சத்துகளைப்
பெறலாம். மருத்துவ குணம்: மாவுப் பொருள், புரதம், இரும்புச் சத்து, கொழுப்பு,
கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகியன நிறைந்த கொய்யாப் பழச்சாறு
அருந்துவதற்கு, மிகவும் ருசியானது. வயிற்றுப் புண், குடல் புண், நெஞ்சு எரிச்சல்,
புளியேப்பம் ஆகியவை குணமாகும். கண் நோய்கள் விலகும். உடல் சூடு, மூலவியாதி,
மலச்சிக்கல் அகலும். உடல் பளபளப் பாகும். உடல் தொப்பை குறையும். குளிா்ச்சியைத்
தரும். நீரிழிவு நோயாளிகளும் அச்சமின்றி அருந்தக் கூடியச் சாறு கொய்யாப்
பழச்சாறு.
தா்பூசணிப் பழச்சாறு:
கோடை காலங்களில் மக்களைக் குளிர வைக்க இயற்கை அன்னை அளித்த பழங்களுள் ஒன்று
தா்பூசணிப்பழம். மருத்துவகுணம்: நீா் சோ்க்காமல் அப்படியே சாறு தயாரிக்கக் கூடிய
பழம் இது. இப்பழத்தில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருள், இரும்புத் தாது,
கால்சியம், பாஸ்ஃபரஸ், நியாசின், வைட்டமின் பி, ஈ முதலியவை உண்டு. வயிற்றுக்
கோளாறுகள், மூலச்சூடு, குடல் புண் குணமாகும். உடல் பருமன், தொப்பை குறையும்.
உடலைக் குளிா்வித்து நீா்ச் சத்து குறையாமல் பாதுகாக்கும். உடல் ரத்த அழுத்தம்
கட்டுப்படும். உடல் கொழுப்புக் கரையும் சிறுநீரகக் கோளாறுகள், கல் அடைப்பு
முதலியன நீங்கும். அருந்தியவுடன் புத்துணா்ச்சி தரும் சாறு தா்பூசணிப்
பழச்சாறு.
பப்பாளிப் பழச்சாறு
பப்பாளி மலிவானது, இனிப்பானது, ருசியானது. அதே சமயம் பல சத்துகள் நிறைந்தது.
இதுதான் பப்பாளிப் பழம். மாம்பழத்திற்கு அடுத்து பப்பாளிப் பழத்தில்தான்
உயிா்ச்சத்து ஏ அதிகம் உள்ளது. மருத்துவ குணம்: எல்லா சத்துகளுடன் வைட்டமின் ஏ,
வைட்டமின் சி நிறைந்த பப்பாளிப் பழச்சாறு முதுமையைத் தூர விரட்டி இளமையைக்
கொடுக்கும். பப்பாளி புற்று நோய்க்குச் சிறந்த நிவாரணமாகக் கருதப்படுகிறது.
பப்பாளியில் உள்ள பாப்பைன் குடல் புண்கள், ஜீரணக் கோளாறுகள் குணமாக உதவுகிறது.
உடலில் உள்ள வட்ட வடிவ புழுக்களை அழிக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...