ஸ்மார்ட்போனில் பேட்டரி நீண்ட நேரம் சார்ஜ் இருக்க வைக்க ஒரு சில டிப்ஸ்
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் புதியதாக அல்லது பழையதாக
இருக்கலாம்.ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் பேட்டரியை அதிக நேரம் சார்ஜ் நிற்க
வைக்க ஒரு சில வழிமுறைகளை நாம் பின்பற்றினாலே போதும்,அதன் மூலம்
பேட்டரியின் செயல்திறனை நாம் நீண்ட நேரம் நிற்க வைக்கலாம். அவ்வாறான சில
செயல்முறைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தப் பதிவில் கொடுக்கப்படும் அனைத்துக் வழிமுறைகளும் ஒருசில ஆய்வுக்கு
உட்பட்டு அதன்மூலம் நான் அறிந்ததை உங்களுக்கு கூறப்போகிறேன். அதற்கு
முன்னால் நாம் உபயோகப்படுத்தும். ஸ்மார்ட்போனின் பேட்டரியை பற்றி தெரிந்து
கொள்வோம்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் அனைத்தும் லித்தியம்
அயன் பேட்டரிகள் அவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அதன் செயல்திறன்
முழுமையாக இருக்கும் அதற்குப்பின் அதனுடைய செயல்திறன் குறைய ஆரம்பிக்கும்
இதற்கு காரணம் நாம் நம் ஒவ்வொரு முறையும் பூஜ்யத்தில்
இருந்து முழுமையாக சார்ஜ் செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
பிறகு அவ்வாறு நாம் முழுமையாக சார்ஜ் செய்தால் அதனுடைய மதிப்பு 100 இருந்து
90 ஆக அதன் பேட்டரி செயல் திறன் குறைகிறது.
நாம் சார்ஜ் செய்யும் பொழுதும் முழுமையாக அதாவது 100% சார்ஜ்
செய்யக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு பேட்டரிக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை
அளவிலேயே அதனை 100% சார்ஜ் செய்யலாம் நாம் ஒவ்வொரு முறையும்100 சதவீதம்
சார்ஜ் செய்யும் பொழுது அதனுடைய வாழ்நாள் குறைகிறது.
நான் சார்ஜ் செய்யும் பொழுது 50 முதல் 60 சதவிதம் வரை மட்டுமே சார்ஜ்
செய்து கொள்வது நல்லது இதன் மூலம் நாம் பேட்டரியின் ஆயுட்காலத்தை
கூட்டலாம்.
நாம் சார்ஜ் போடும் பொழுது அந்த இடம் ரொம்ப குளுமையாக வோ அல்லது
வெப்பமாகவும் இருக்கக்கூடாது,அதாவது மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது அதனை
டிவிக்கு அருகிலோ அல்லது பிரிட்ஜ் அருகிலோ வைக்கக்கூடாது அதன் மூலம் மொபைல்
ஹிட் ஆகலாம், இதன் மூலமும் பேட்டரியின் வாழ்நாள் குறைய வாய்ப்புள்ளது.
நாம் சார்ஜ் செய்யும் பொழுது மொபைல் கேம் விளையாடி அல்லது வேறு எந்த
விதத்தில் உபயோகித்தோ சூடாக இருந்தால் அதனுடைய மொபைல் கவரை கழட்டி
வைத்துவிட்டு சார்ஜ் செய்வது நல்லது இதன் மூலமும் அந்த சூடுடைய தன்மை
மொபைல் பேட்டரியை பாதிப்பிலிருந்து தவிர்க்கலாம். சமீப காலத்தில் நாம் அனைவரும் குயிக் சார்ஜர் அல்லது ஃபாஸ்ட் சார்ஜர்
அம்சமுள்ள ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறோம்.அவ்வாறு நாம் தொடர்ந்து அந்த
பார்ட் சார்ஜர் உபயோகித்து மொபைலை சார்ஜ் செய்வதன் மூலம் அதன் ஆயுள் திறன்
முன்பு சொன்னது போல 100 லிருந்து 90 அளவிற்கு குறைவதற்கு பதிலாக 80 வீதம்
அளவிற்கு குறைவதாக ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஒப்போ நிறுவனம் மறுத்துள்ளது. எனவே தேவைப்படும் பொழுது மட்டும் பார்
சார்ஜரை உபயோகித்து மற்ற நேரங்களில் அதாவது வீட்டில் இருக்கும் உங்களது
10w,18w சார்ஜர் உபயோகித்துக்கொள்ளலாம் அதன் மூலம் நம் பேட்டரியின்
செயல்திறனை காப்பாற்ற முடியும்.
ஸ்மார்ட்போனின் பேட்டரியும் நம்மைப் போலவே தான் நாம் எப்போ சாப்பிடாம
இருக்கும்போது ரொம்ப பலவீனமா உணர்கிறோமோ அதேபோலதான் பேட்டரியும் 20
சதவீதத்திற்கு குறைவாக பொழுது அதுவும் மிகவும் சோர்வடைகிறது அதேபோல் 100%
அடையும் பொழுது அது மகிழ்ச்சி அடைவது இல்லை அதற்கு மாற்றாக ஸ்டிரஸ்
ஆகிவிடும்.
நாம் எப்பொழுதும் 25-ல் இருந்து அதிகபட்சமாக 85 சதவீதம் வரை மட்டுமே
ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் வைத்துக்கொள்ளவேண்டும்.
ஆட்டோ பிரைட்னஸ் இதனை உபயோகித்து நாம் பேட்டரியை சேமிக்கலாம் ஆனால்
தற்சமயம் ஸ்மார்ட்போனில் சென்சார்கள் உள்ளதால் அது அடிக்கடி நம் இருக்கும்
சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பிரைட்னஸ் குறைத்து ஏற்றி கொண்டே இருக்கும்.
எனவே ஆட்டோ பிரைட்னஸ் அனைத்து விட்டு மேனுவல் ஆக நாம் தேவைப்படும் அளவு
பிரைட்னஸ் ஏற்றி குறைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் பிரைட்னஸ் மூலம் சார்ஜ்
சேமிக்கப்படுகிறது சென்சார் வேலை நிறுத்தப்பட்டு சார்ஜ் சேமிக்கப்படுகிறது.
ஒரு சிலர் இரவு முழுவதும் சார்ஜர் செய்யலாமா செய்யக்கூடாதா என்று
குழப்பத்தில் உள்ளனர்.
குறைந்தபட்ச திறன் உள்ள சார்ஜர்களை உபயோகித்து நாம் சார்ஜ் செய்யும் பொழுது
மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஆகும் அவ்வாறு செய்யும் பொழுது நாம் இரவு
முழுவதும் செய்து கொள்ளலாம்.ஆனால் தற்போது பெரும்பாலானோர் சார்ஜர்
உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால்
தயவுசெய்து ஷேர் செய்யுங்கள் அவ்வாறு நாம் ஃபாஸ்ட் சார்ஜரை அதேபோல்
உபயோகித்தால் பிரச்சனை ஒன்றுமில்லை ஆனால் அது பேட்டரியின் ஆயுள் காலத்தை
குறைக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம் முடிந்தவரை நாம் நம் ஸ்மார்ட்போன் உடன் கொடுத்த
ஒரிஜினல் சார்ஜர் மற்றும் ஒரிஜினல் கேபிளை கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும்.
சில சமயம் அது தொலைந்து விடும் பொழுது நாம் தவறுதலாக மூன்றாம்தர சார்ஜர்
களை உபயோகிப்போம் அவ்வாறு உபயோகிப்பது பேட்டரியின் திறன் மட்டுமின்றி
ஸ்மார்ட்போனின் செயல்திறனையும் பாதிக்கும்.
எனவே முடிந்தவரை கொஞ்சம் கூடுதலாக செலவு செய்து அந்த நிறுவனத்தின் சார்ஜர்
களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன் வால்பேப்பரை கொண்டும் சார்ஜ் சேமிக்கலாம்
அதாவது நாம் பெரும்பாலும் டார்க் வால்பேப்பர்களை பயன்படுத்த வேண்டும்.
AMOLED டிஸ்ப்ளே உபயோகிக்கும் பொழுது இந்த டார்க் வால்பேப்பர்களை
உபயோகிப்பதால் எங்கெல்லாம் கருப்பு வண்ணங்களில் உள்ளதோ அங்கெல்லாம்
டிஸ்ப்ளே க்குள் உள்ள லைட் ஆப் ஆகி விடும் அந்த இடத்தில் சார்ஜ்
சேமிக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு அப்டேட் அல்லது அப்ளிகேஷன் அப்டேட் புதிதாக கொடுக்கப்படும்
பொழுது அதனை உடனடியாக அப்டேட் செய்ய கூடாது. கூகுளில் அந்த அப்டேட் பற்றி
மற்ற பயனர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை ஆராய்ந்த பிறகு அப்டேட் செய்து
கொள்ளுங்கள் ஒருசில அப்ளிகேஷன் அல்லது நிறுவனம் அளிக்கும் அப்டேட்கள்
சார்ஜிங் சம்பந்தமான சில பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்று சமீபத்தில் பலர்
கூறியிருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...