குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட பெற்றோர் புது விதமாக சிந்திக்கிறார்கள்.
தங்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட தனித்துவமாகவும், வித்தியாசமாகவும்
ரசிக்கும் படியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்ப
உறுப்பினர்களின் பெயர்களில் சில எழுத்துக்களை தங்கியிருக்க வேண்டும் என்று
நிறைய பேர் விரும்புவார்கள். அதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், பெயர்
சூட்டும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
பிற மனிதர்களிடமிருந்து, நம்மை அடையாளப்படுத்த கூடியது பெயர்கள் தான்.
அப்படிப்பட்ட பெயரில் குறிப்பிட்ட சில பெயர்களை வைத்தால், பல நாடுகளில்
தண்டனை கிடைக்கும்.
மெசியா, ஆகுமா ,மலக் போன்ற பெயர்களை பல நாடுகள் தடை விதித்துள்ளன.
நீண்ட எழுத்துக்களுடன் இருக்கும் பழமையான பெயர்களை கூடுமானவரை தவிர்த்து விடுவது நல்லது.
அதே நேரத்தில் கலாச்சாரத்துடன் ஒத்திருக்கும் பெயர் வைக்கலாம். அது
எதிர்காலத்தில் குழந்தைகள் தங்கள் பெயரை உச்சரிப்பதற்கு தயங்காத நிலையை
ஏற்படுத்தும்.
இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் பெயர்களில் இருந்து பொருத்தமான பெயரை தேர்ந்தெடுக்கலாம்.
குழந்தையின் பெயரை உச்சரிப்பதற்கு இனிமையாகவும் குறைந்த எழுத்துக்கள் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
நான்கு, ஐந்து எழுத்துக்களுக்கு மேல் இருக்கக்கூடாது. ஏனெனில்
பெரும்பாலானவர்கள் முழுநீள பெயரை கூறி அழைப்பதில்லை. குழந்தைக்கு வைக்கும்
பெயர் மற்றவர்கள் கேலி ,கிண்டல் செய்யும் படி அமைந்துவிடக் கூடாது.
சட்டென்று மனதில் பதியும்படி இருக்க வேண்டும். உச்சரிக்க சிரமப்படும்
அளவுக்கு இருக்கக் கூடாது.தங்கள் குழந்தையின் பெயர் தனியாக தெரியவேண்டும்
என்பதற்காக பிரபலமாக இருக்கும் பிராண்டுகளின் பெயரையோ, விசித்திரமான
இடங்களின் பெயர்களை தாங்கி இருக்கும் பெயர்களையோ வைக்க கூடாது.
அது மற்றவர்களின் விமரிசனத்திற்கு வழிவகுத்துவிடும்.
மூதாதையர்களின் பெயர்களையோ, பழைமையான பெயர்களையோ வைப்பதற்கு முன்பு
சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.பழைய பெயர்களாகவே இருந்தாலும் எல்லா
காலகட்டத்திற்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.
அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய பேர் வாய்க்குள்
நுழையாத பெயர்களை வைத்து விடுகிறார்கள். அதனை மற்றவர்கள் கேலி செய்ய
நேரிடும்.அர்த்தம் பொதிந்த பெயர்கள் கூட சில சமயங்களில் கேலிக்கு
உள்ளாகலாம். அதனால் கவனமாக சிந்தித்து பொருத்தமான பெயரை சூட்ட வேண்டும்.
சிலர் வைக்கும் பெயர் அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்ற குழப்பத்தை
ஏற்படுத்தி விடும். பாலினத்தை சரியாக குறிக்கும் விதத்தில் பெயர்
அமைந்திருக்க வேண்டும்.நல்ல பெயராக இருக்கிறது என்பதற்காக உறவினர்கள்
ஏற்கனவே பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் பெயரை திரும்பவும் சூட்டக் கூடாது.
இது குழந்தைகளுக்கே குழப்பத்தை ஏற்படுத்தி விடும். ஆங்கில எழுத்துக்களின்
தொடக்க எழுத்தில் பெயர் ஆரம்பிப்பது நல்லது. கடைசியில் உள்ள எழுத்துகளில்
பெயர் வைத்தால் வகுப்பில் தொடங்கி பல்வேறு இடங்களில், பேர் கடைசியாக இடம்
பெற நேரிடும். மற்றவர்கள் பெயர்கள் வாசித்து முடிக்கும் வரை காத்திருக்க
வேண்டியதிருக்கும்.
கடைசியாக குறிப்பிட்டுள்ள கருத்து தவறானது.A, என்ற எழுத்திலே பெயர் வைத்தாலும் 50 மாணவர்கள் பெயரும் அதிலே தொடங்க்கினாலும் யாராவது ஒருவர் 50வது ஆளாக இருந்துதானே ஆகவேண்டும்.
ReplyDelete