அமைச்சர் கே.பி.அன்பழகன்
பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் கல்லூரி தேர்வை ரத்து செய்வது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் தமிழகத்திலும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வெளியாகின.
இதுபற்றி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார். பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் கல்லூரி தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Can conduct online exam .
ReplyDelete