# அவகேடோ பழத்தில் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.
முக்கியமாக கொழுப்புகள், மாங்கனீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி ,
வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
# அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து
நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல்
எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
# புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும்.
# இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும். அவகோடா பழத்திலுள்ள
சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக
ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன.
# கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது.
இந்த அவகோடா மிகவும் பயனுள்ள பழம். சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல்
இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு
வருவது அவசியமாகும்.
# அவகேடோ பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே செரிமான
பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும் உடல் எடையை குறைக்க
நினைப்பவர்கள் இந்த பழத்தை எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.இது
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
# இதயம், தோல் மற்றும் தசைகள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும் சிறந்த
நிவாரணியாக அவகோடா பழம் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம் சத்துக்கள்
அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்
சிறந்ததாகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...