இன்றைய காலகட்டத்தில் அவசரமான வேலைகளால் காலை உணவை பலரும் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் அவசரம் கருதி காலை உணவை தவிர்த்து வருவதால் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு மோசமான தன்மை அடையும் என்ற அபாயத்தை அறியாமல் பலர் இருக்கின்றனர் .
மனிதர்களின் வாழ்வில் காலை உணவிற்கென முக்கிய பங்கு இருக்கிறது. நமது உடல் ரத்தத்தின் சர்க்கரையை சரியான அளவில் வைத்து, நமது உடல் நலனை நீண்ட நாட்கள் காக்கிறது. பெரும்பாலானோர் ஈடுபடும் உடல் எடை குறைப்பு முயற்சியில், காலை உணவு தவிர்ப்பது அங்கமாக உள்ளது .
இப்படி காலை நேர உனவுகளை தவிர்த்தால் உடலின் கலோரி குறைந்து, உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். வேலை மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும், நீண்ட தூர பயணத்தை மேற்கோள் கட்டியும் சாப்பிட நேரம் இல்லாமல் காலை உணவை தவிர்ப்பவரும் இருந்து வருகிறார்கள்.
இதில் காலை உணவுகளை தவிர்ப்பதால் நீரழிவு நோய் ஏற்படும். இதனால் காலை உணவுகளை தவிர்க்காமல் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், வாரத்தின் நான்கு நாட்களாவது காலை உணவுகளை எடுத்துக்கொள்ள பட்சத்தில் கட்டாயம் நீரிழிவு நோய் ஏற்பட 55 விழுக்காடு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது .
இதனைப்போன்று உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் அதிகரித்து, மனஅழுத்தம் ஏற்படவும் வழி வகுக்கிறது . காலை உணவை தவிர்த்து நொறுக்கு தீனியாக எடுத்தாலும், இன்ஸுலின் செயல்பாடு எதிர்மறை மாற்றத்தை அடைந்து, மனஅழுத்தம் அதிகமாகும். அதிலும் குறிப்பாக காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும்.
இதனால் இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறும் ஆபத்து உள்ளது. பித்தம் தலைக்கு ஏறினால் என்ன நடக்கும் என்பது எல்லாவரும் அறிந்ததே.
மேலும் வயிற்றில் ஏற்படும் புண், வயிற்று உப்புசம் என்று சொல்லப்படும் தீராத வலி மற்றும் வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவை காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும் தீங்குகள் ஆகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...