எச்சரிக்கும் மருத்துவர்கள்'.. 'புரோட்டா பிரியரா நீங்கள்?'.. 'அப்போ இந்த விளைவை நீங்கள் சந்திக்க நேரிடலாம்'..
பெரும்பாலான மக்களுக்கு புரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும்.
ஏனென்றால் அதன் சுவையும், குறைவான விலையும் தான் அதற்கு முக்கிய
காரணமாகும்.
மேலும் புரோட்டாவில் வீச்சு, கொத்து, முட்டை கொத்து, சிக்கன் புரோட்டா என பல வகைகளில் செய்யப்படுகின்றன.
ஆனால் இவ்வளவு சுவை கொண்ட இந்த புரோட்டாவை சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கோதுமையில் இருந்து எடுக்கப்படுவது தான் மைதா. ஆனால் கோதுமையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மைதாவில் கிடையாது.
ஏனென்றால் கோதுமையில் இருந்து பிரிக்கப்படும் மூன்று பாகங்களில்
கடைசி பாகம் தான் இந்த மைதா. அதாவது endosperm எனப்படும் மூன்றாம்
பாகத்தில் இருந்துதான் இந்த மைதா தயாரிக்கப்படுகிறது.
இதில் உள்ள gluten என்ற ப்ரோடீன் செரிமானத்தை தாமதமாக்கும். அதவாது செரிமானமாக தாமதம் ஆகும்.
மேலும் இதில் உள்ள gluten என்ற ப்ரோடீனால் தான் புரோட்டா நல்ல பஞ்சு போலவும், இழுத்தல் எலாஸ்டிக் போன்று விரியவும் செய்கிறது.
இதனால் இதில் தயாரிக்கப்படும் புரோட்டாவை நாம் சாப்பிடும்போது செரிமானமாக நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...