Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் - காத்திருக்கும் ஆபத்துகள்!

ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் - காத்திருக்கும் ஆபத்துகள்! 

எந்த பொருளை வாங்கினாலும் கேஷ்-பேக்! எதற்கு இந்த கேஷ்-பேக்? பாதிக்குப் பாதி கூட இல்லாத விலையில் ஒரு பொருளை விற்க முடியுமா? இது எப்படி சாத்தியம்? இதனால் அந்த நிறுவனங்கள் எப்படி இலாபம் ஈட்டுகிறது? நம்மில் எதனை பேருக்கு இந்த கேள்விகள் மனதிற்குள் எழுந்திருக்கும்! இதோ அதற்கான விடையங்கள். இந்த உலகலத்தில் எதுவுமே சும்மா கிடைக்காது. அனைத்திற்கும் பின்னாடி ஒரு மறைமுக லாபம் இருக்கிறது. 50% ஆஃபர் விலையென்றால் அது ஸ்டாக் கிளியரன்ஸ் என்று அறிந்த நமக்கு, இந்த கேஷ்-பேக் ஒரு கண்கட்டி வித்தை என்று அறியாதது வருத்தப்பட வேண்டிய விஷயம். 

இந்த கேஷ்-பேக் முறையில் பொருட்கள் நமக்கு எளியமுறையில் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று நாம் அனைவரும் நினைத்து வாங்கி கொண்டிருக்கின்றோம். அனால் இதன் மறுபக்கத்தில் எப்படிப்பட்ட சிக்கலில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பதை யாரும் சிறிதும் யோசித்து பார்ப்பதில்லை. ஆன்லைன் கேஷ்-பேக் சூத்திரத்தின் முதல் வேலையே உங்களுக்குத் தேவையே இல்லாத APP-ஐ உங்களுக்குத் தேவையுடையதாக மாற்றுவதே! அடுத்து நீங்க அதை அன்இன்ஸ்டால் செய்யாமல் பார்த்துக்கொள்வது! 
 
அதற்கு ஆன்லைன் நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் முதற் கட்டமாக APP-களை இன்ஸ்டால் செய்வதற்கு "முதல் ஆர்டர் முற்றிலும் இலவசம்" என்று விளம்பரப்படுத்தி மக்களிடம் ஆசை காட்டி ஆர்வத்தை தூண்டிவிட்டு டவுன்லோட் செய்ய வைப்பதே. நாமும் ஆர்வத்தோடு ஆசையாக டவுன்லோட் செய்து முதல் ஆர்டரை இலவசமாக பெறுவோம். இது முடிந்ததும் 'இவ்வளவுக்கு பொருட்கள் வாங்கினால் இவ்வளவு கேஷ்-பேக்" என்று விளம்பரங்களை அனுப்பி ஆர்வத்தை தூண்டுவார்கள். அதையும் நாம் வாங்குவோம்! கேஷ்-பேக் பணம் நம்முடைய பேங்க் அக்கௌன்ட்டிற்கு பணமாக வராது. 

அதற்கு மாறாக எந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செஞ்சு பொருட்களை வாங்கினீர்களோ அதே APP- ல் பேலன்ஸாக கேஷ்-பேக் ஆன பணம் இருக்கும். இதனால் அந்த APP-ஐ அன்இன்ஸ்டால் செய்ய மனதில்லாமல், இருக்குற கேஷ்-பேக் பணத்தை செலவு செய்ய வேறொன்றை திரும்ப ஆர்டர் செய்து வாங்குவோம். அதற்கான கேஷ்-பேக் அதே மாதிரி அவர்களுடைய APP- ல் சேரும். சூழ்ச்சியில் அகப்படும் நிலைமை இதற்கு அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட APP- ற்கும் உங்களுக்கும் இடையில் இன்னொரு APP அறிமுகம் செய்கிறார்கள். 

அதுதான் பேமென்ட் கேட்வே கான்செப்ட்! அந்த ஆப் வழியாக பணம் செலுத்தினால் இவ்வளவு கேஷ்-பேக் அல்லது ஆஃபர்னு விளம்பரம் செய்கிறார்கள். நாமும் அதை இன்ஸ்டால் செய்து பணப்பரிவர்த்தனை செய்கிறோம். இப்பொழுது உங்களுடைய இன்னொரு பகுதி பணமும் இரண்டாவதாக ஒரு APP- ல் பேலன்ஸா சேமிப்பாகும். பின்பு அந்த APP-களையும் பொருட்களை வாங்க பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றோம். 

இப்பொழுது இரண்டு APP-களில் கேஷ்-பேக் பணம் இருப்பதால் அதை அன்இன்ஸ்டால் செய்ய நம் மனம் இடம் கொடுப்பது இல்லை! இப்படி நமக்கே தெரியாமல் நம்மை அவர்களுடைய APP- ற்கு அடிமையாக்கி விடுகிறார்கள். சில நாட்களுக்கு பிறகு உங்களுக்கு கொடுத்த 50% ஆபர் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கடைகளில் வாங்குகின்ற அதே விலைக்கே வாங்க வைத்து விடுவார்கள். இதன் மறுபக்கத்தில் நமக்கு காத்திருக்கும் ஆபத்து என்னவென்றால், இந்த APP- களை மொபைலில் இன்ஸ்டால் செய்யும் பொழுது நம்முடைய கான்டாக்ட், ஸ்டோரேஜ், கால், மெஸேஜ், பிக்ச்சர் போன்றவைகளை மேனேஜ் செய்துகொள்ளலாம் என்று சிறிதும் யோசிக்காமல் சில அனுமதிகளை அந்த APP- ற்கு கொடுக்கின்றோம். 
 
அறிவியலின் அதீத வளர்ச்சியின் விளைவாக, மற்றவர்களுடைய இரகசியங்களை அவர்களின் அனுமதி இல்லாமலேயே கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் இருந்து திருடும் இக்காலத்தில், அந்த APP-களுக்கு அனுமதி கொடுத்த பின் APP நிறுவனம் நம்முடைய மொபைலில் இருக்கின்ற அனைத்து விஷயங்களையும் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாமல் எப்படி இருப்பார்கள்! நம்முடைய மொத்த தொடர்புகளும் அவர்களின் மற்ற பயன்பாட்டிற்கு டேட்டா-பேஸாக உதவ ஆரம்பித்துவிடும். உங்களுடைய வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் என்று அனைத்து பயன்பாட்டையும் அறிந்துகொண்டு உங்களுக்கு என்ன தேவை, எது தேவையில்லை என்று ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் விளம்பரங்களை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். 

 நம்முடைய டேட்டாக்களை மற்ற நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் விற்று பணமாக்கி கொள்கிறார்கள். நமக்கு தேவையான விளம்பரங்களை போட்டு விளம்பர நிறுவனங்களிடம் இருந்து பணம் சம்பாதித்து கொள்கிறார்கள். மேலும், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவங்களுக்கு மிகப்பெரிய மறைமுக இலாபம் என்னவென்றால், ஷோரூம் வாடகை, ஏசி, மின்சாரம் போன்ற செலவுகளெல்லாம் இல்லை. நேரடியாக ஃபேக்டரியில் இருந்து பாதி விலைக்கு வாங்கித்தான் நமக்கு விற்பனை செய்கிறார்கள். நண்பர்களே, அநேக ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கேஷ்பேக் என்னும் கவர்ச்சியான முறையை நமக்கு அறிமுக படுத்தி, நம்மை அவர்களுக்கு அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன. எந்த ஒரு APP-யும் மொபைலில் இன்ஸ்டால் செய்வதற்கு முன் நிதானமாக யோசித்து இன்ஸ்டால் செய்து பயன் பெறுங்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive