முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம்.. ஏன்
தினமும் தொடர்ந்து பல பணிகளை நாம் செய்து வருகிறோம். இன்றளவில் பல
நோய்கள் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது.
நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு இருக்கும் பட்சத்தில், நமக்கு
எந்த விதமான பிரச்சனையும் கிடையாது. முருங்கை கீரையை சாப்பிடுவதால்
ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.
முருங்கையில் இருக்கும் வைட்டமின் சி சத்து, ஆரஞ்சு பழத்தில்
இருக்கும் வைட்டமின் சி சத்துக்களை விட 7 மடங்கு அதிகமாகும். வைட்டமின் ஏ
சத்து, கேரட்டில் இருக்கும் சத்தை விட 4 மடங்கு அதிகமாகும்.
வைட்டமின் பி 2 சத்து, வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 2 சத்தை விட 50 மடங்கு அதிகமாகும்.
வைட்டமின் பி 3 சத்து, வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்களை விட 50
விழுக்காடு அதிகம் ஆகும். கால்சியம் சத்து பாலில் இருக்கும் சத்தை விட 4
மடங்கு அதிகம் ஆகும்.
இதனைப்போன்று பாலில் உள்ள புரோட்டின் சத்தை விட 2 மடங்கு
அதிகமாகவும், முட்டையில் உள்ள மெக்னீசியம் சத்தை விட 36 மடங்கு
அதிகமாகவும், பிற கீரைகளில் உள்ள இரும்பு சத்தை விட 25 மடங்கு அதிகமாகவும்,
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தை விட 2 மடங்கு அதிகமாகவும் என பல
சத்துக்களை தன்னகத்தே அதிகளவு கொண்டுள்ளது.
இதனைப்போன்று தமிழ் பழமொழிகளில் முருங்கையை உண்டவன் வெறும் கையுடன்
நடப்பான் என்ற பழமொழியும் நம்மிடையே வழக்கத்தில் இருப்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...