ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் கீழ்பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வைரமணி. இவரது மகன் முத்து ஜெயபால் (22). இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.பி.ஏ., இந்த ஆண்டு முடித்துள்ளார். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளுக்கு ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கி வந்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியுள்ளதால் உணவு வழங்க இயலாத நிலை ஏற்பட்டதையடுத்து, கொரோனா குறித்த விழிப்புணர்வை நகர் மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முகக் கவசம் மற்றும் சானிடைசரை முத்து ஜெயபால் இலவசமாக வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இது குறித்து அவர் கூறுகையில்: அரசு எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்களில் பெரும்பாலானோர் இதனைக் கடைபிடிப்பதில்லை. இதனால் அவர்கள் மட்டும் பாதிக்கப்படாமல் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம் மற்றும் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, பிறந்தநாளில் இது போன்ற நிகழ்ச்சியை செய்தேன் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...