செங்கல்பட்டில் இருந்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்த வர்களுக்கு கொரோனா பாதித்துள்ளதாக, வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருவதால், ஆசிரியர்கள் பீதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓத்தி வைக் கப்பட்ட பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிகள், கடந்த 27ம் தேதி தொடங்கியது. சேலம் மாவட் டத்தை பொறுத்தவரை, 3முதன்மை விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், 3 துணை மையங்களிலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளில், முதுகலை ஆசிரியர்கள் உள் பட 2,851 பேர் ஈடுபட்டு வரு கின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அனைத்து மையங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, அயோத்தியாப்பட்டணம் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தை சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக, ஆசி ரியர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, இரு ஆசி ரியர்கள் பேசும் ஆடியோ ஓன்று, வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. அதில், விடைத்தாள் திருத்தும் மையத்தில் இருந்த ஒரு ஆசிரியர், வெளியில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்களை தெரிவிக் கிறார்.
அந்த ஆடியோவில், “தான் வெளியூரில் இருந்து வந்ததை அந்த ஆசிரியர், சிஇஓவிடம் சொல்லிவிட்டாராம். தற்போது கேம்ப் பில் எந்த பிரச்னையும் வந்துவிட கூடாது என, கொரோனா உறுதியானதை அப்படியே வைத்துள்ளார் களாம். தமிழகம் அளவில் பெரிய விஷயமாக சென்று விடும் என நினைக்கிறார் கள். யாருக்கும் சொல்ல வேண்டாம் என்கிறார்களாம். தற்போது அந்த அம்மா, சேலம் அரசு மருத்துவம னையில் தான் அனுமதிக் கப்பட்டுள்ளாராம். அந்த அம்மாவுக்கு பாஸிட்டிவ் இருப்பதுஉறுதிசெய்யப்பட் டதால்,அவர் இருந்த ரூமை சுத்தம் செய்ய சொல்லியிருக்காங்களாம். வெளியே சொல்ல வேண்டாம் என சிஎம் ஆர்டர் போட்டுருப்பாரோ? ஒருத்தருக்கு வந்துட்டா, கேம்ப்ப குளோஸ் பண்ணனுமில்ல.
அந்த அம்மாவோட CE கூட, கொரோனா இருக்குதுனு சொல்றாராம். நமக்கு வந் துருமோனு பயமா இருக்கு. தமிழ்நாடு லெவல்ல பிளாஸ் நியூஸ் ஓடிரும்னு சொல்லாம இருக்காங்கனு நினைக் குறேன். எதுக்கு எல்லா ஆசிரியர்களின் உயிரோட விளையாண்டுட்டு இருக் காங்க. ஜிஎச்லதான் இருக் காங்கனு சொல்றாங்க. அது என்னனு தெறிஞ்சுகிட்டா, நாமளும் எச்சரிக்கையா இருக்கலாமில்ல,”இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது.
இந்த ஆடியோ, நேற்று காலைமுதல் ஆசிரியர்கள் மத்தியில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால், தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என சக ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் சிலர் கூறிய தாவது:
இடைப்பாடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஒரு அரசு பள்ளியில், தாவரவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் பெண் ஆசிரியை ஒருவர், சமீபத்தில் செங்கல்பட்டிற்கு சென்றுள்ளார்.
விடைத் தாள் திருத்தும் பணிக்காக திரும்பி வந்த அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,
வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதன் முடிவு பாசிட்டிவாக
வந்ததால், விடைத்தாள் திருத்தும் மையத்திலிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது.
ஆசிரியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், அதன் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கும் என நினைத்துக் கொண்டு, உண்மையை மறைத்தால் அது வேறுவிதமான பின் விளைவை ஏற்படுத்தி விடும். நாங்கள் மட்டுமின்றி, எங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இதனை தெளிவுபடுத்தி, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “விடைத் தாள் திருத்தும் மையத்தில் உள்ள யர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. முகாமில் அனைவரும் நலமாக உள்ளனர்.வாட்ஸ் அப்பில் வரும் வதந்தியை நம்பவேண்டாம் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றனர்.
இதனிடையே, வெளிமாவட்டத்தில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்த ஆசிரியர்களின் பட்டியலும், தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...