கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய என்ன சாப்பிடலாம்?
🥒 கோடைக்காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும்
நாவறட்சியை போக்கும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால்
சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும்.
🥒 சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பலன்கள் :
🥒 சுரைக்காய் வைட்டமின் பி, சி சத்துக்களை கொண்டுள்ளது. இவற்றை சாப்பிடுவதால் உடல் பலமாக இருக்கும்.
🥒 சுரைக்காயின் சதைப்பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை
பழச்சாற்றை சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம்
பெறலாம்.
🥒 சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கும் சுரைக்காய் சாப்பிடுவது மிகச்சிறந்தது ஆகும்.
🥒 காமாலை நோய்க்கும் சுரைக்காயைப் பயன்படுத்தலாம்.
🥒 சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும்.
🥒 சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
🥒 அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம்.
🥒 வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
🥒 சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.
🥒 மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும்.
சுரைக்காயின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
🥒 கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.
🥒 உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
🥒 நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...