2008-09-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கணக்கில் கொண்டு, ஒருவருக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்ற அடிப்படை கடன் அளவு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடன் வழங்கும் அடிப்படை அளவை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் சாமானிய மக்கள் பெறும் கடன்களை பொறுத்தவரை, பாதுகாப்பான கடன், பாதுக்காப்பற்ற கடன் என 2 வகை உண்டு. பாதுகாப்பான கடன்களில், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவை வரும். பாதுகாப்பற்ற கடனில், தனிநபர் கடன், கிரெடிட் கார்ட் கடன் போன்றவை அடங்கும்.
இந்தியாவில், தனிநபர் மற்றும் கிரெடிட் கார்ட் கடன்கள் திரும்பி செலுத்தப்படாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், கடன் வழங்கும் அடிப்படையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் இனி வரும் காலங்களில் வங்கிகள் கடன் வழங்குவதில் மிக கடுமையான நடைமுறைகளை பின்பற்றும் என தெரிகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...