பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா ? அல்லது மாணவர்களின் பாதுகாப்பா? என பார்க்கும்பொழுது மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது . பொதுத்தேர்வு அவசியம் தான் ஆனால் அதை விட மிக மிக முக்கியமானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலனில் அக்கறைகாட்டி இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பொதுத் தேர்வு நடத்தாமல் மாற்றுவழிகளை சிந்திப்போம்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எதற்கெல்லாம் அவசியம் என்பதை முதலில் பார்ப்போம். பத்தாம் வகுப்பு முடித்து அதன் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சேர்வதும் அதைத்தவிர பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் சேருவதற்கு அது மிக அவசியமான மதிப்பெண்களாக கருதப்படுகின்றது இவ்வாறு இருக்க பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அடிப்படையில் நம் மாநிலத்தில் சில அரசு மற்றும் தனியார் வேலைகளும் வழங்கப்படுகின்றன அதற்கு இந்த பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மிக அவசியமான ஒன்றாக இருப்பதால் தேர்வு அவசியம் என்று கருதுகிறோம்.
இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் தேர்வு இல்லாமல் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு வழி என்று பார்த்தால் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது காரணம் இந்த ஆண்டு புதிய பாடப் புத்தகங்களை மாணவர்கள் படித்துள்ளதும் அதைத் தாண்டி தேர்வு முறையில் மாற்றங்களும் அமல்படுத்தப்பட்ட நிலையில் காலாண்டு ,அரையாண்டு தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் மாணவர்கள் எடுத்து இருக்கும் பட்சத்தில் அம்மதிப்பெண்களை வழங்குவது சரியாக இருக்காது . முழு ஆண்டுக்கு தயாராக உள்ள மாணவர்கள் காலாண்டு அரையாண்டு தேர்வுகளை விட அதிக தேர்ச்சி பெறுவதும் நிறைய மதிப்பெண்கள் பெறுவது சாத்தியம். காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களில் உங்களுடன் சராசரியாக சில மதிப்பெண்களை சேர்த்து வழங்குதல் அவர்களுக்கு சரியான மதிப்பெண்களாக இருக்கும்.
தேர்வுகள் நடத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொழுது நோயின் தீவிரம் குறைந்த பின்பு இந்த தேர்வுகளை நடத்தினால் மாணவர்கள் மனநிலை சரியாக இருக்கும். இப்பொழுது இருக்கும் மனநிலையில் தேர்வின் அச்சத்தை காட்டிலும் நோயின் அச்சம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரிதும் தொற்றிக் கொண்டுள்ளது இந்த சூழ்நிலையில் தேர்வை தள்ளிவைப்பது முறையாக இருக்கும். தேர்வை ரத்து செய்தால் அவர்களுக்கு சரியான மதிப்பெண்களை வழங்குவதும் அரசின் கடமையாக இருக்கும் .
நாம் எவ்வளவுதான் சமூக இடைவெளி கடைபிடிக்கச் சொல்லி மாணவர்களிடம் சொன்னாலும் பல நாட்களுக்கு பிறகு மாணவர்கள் ஒன்றாக சந்திக்கும் பொழுதும் ஒன்றாக அமர்வதும், அவர்களுடன் பேசுவதும், மாணவர்கள் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு வரும் போது ஒரே மிதிவண்டியில் இருவர் ஒன்றாக வருவதும் . இப்படி ஒரு பெற்றோர் இருவரை அழைத்துக் கொண்டு வருவதும் அவர்களுக்கு போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும் என்பதால் இவ்வாறு தேர்விற்கு வருவர் இது ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது.

. எட்டு இலட்சம் மாணவர்களும் இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் மொத்தம் பத்து இலட்சம் பேரின் நலன் சார்ந்த விஷயம் எனவே இந்த சூழ்நிலையில் சரியான முடிவெடுக்க அரசிடம் மாணவர் மற்றும் ஆசிரியர் சார்பாக வேண்டுகிறோம் .
ஸ்ரீ.திலிப்,அ.மே. நி.பள்ளி,சத்தியமங்கலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...