ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு : தி இந்து
பக்கங்கள் : 192
விலை : ரூ.200
நமது குழுவில் உள்ள அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.... வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.... எஸ்.ரா அவர்களின் புத்தகங்களை இதற்கு முன்பு நான் வாசித்ததில்லை...ஹப்பா... வியக்கிறேன் என்ன ஒரு எழுத்து நடை... புத்தகத்தை கீழே வைக்கவே மனது வரவில்லை....
ஆசிரியர் வாசித்த புத்தகங்களின் அறிமுக நூல் இது..... இந்நூலில் 57 கட்டுரைகள் உள்ளன.... ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் இரண்டு நூல்களையாவது நமக்கு அறிமுகம் செய்கின்றது..... ஒவ்வொரு புத்தகமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல.... புதுப் புது புத்தகங்கள் புது புது அறிமுகங்கள்...
ஆசிரியருக்கு புத்தகத்தின் மீது உள்ள மோகமும் அதைப் பெறுவதற்கு எவ்வாறெல்லாம் அலைந்து திரிந்து இருக்கிறார் என்பதை காணும் பொழுது வியப்பாகவே உள்ளது... பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பெரும்பாலும் பழைய புத்தகங்களையே விலைக்கு வாங்குகிறார்.... சாலையோர கடைகள்... மலிவு விலை கடைகள் என ஒவ்வொரு ஊரிலும் எங்கு எப்பொழுது புத்தகங்கள் விற்கும் என்பதை ஆசிரியர் மிக அழகாக கூறியுள்ளார் ... இந்நூலில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகவே இருந்தன ....
நூல் முழுவதும் அட....அப்படியா... அட்டகாசம் .....என சிந்திக்கும் வைக்கும் தகவல்கள் நிறைய உள்ளது. இந்நூலில் அனைத்து துறைகளைப் பற்றிய விவரங்களும் மிக அழகாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்... சில எடுத்துக்காட்டுகளை குறிப்பிடலாம் என்று நினைத்தேன் ஆனால் 57 கட்டுரைகளிலும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகவே உள்ளன எதை விடுவது எதை சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை....
நமக்கு விருப்பமானவர்களுக்கு எந்தத் துறை பிடிக்கும் என்று தெரிந்தால் அந்த துறையில் எந்த புத்தகம் சிறந்த புத்தகம் என தேர்ந்தெடுத்து பரிசு அளிப்பதற்கு இந்த நூல் உதவியாக இருக்கும்.....
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...