தமிழகத்தில்
மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை எனவும், அதுகுறித்து
வெளியாகும் தகவல் வதந்தி எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மார்ச் மாதத்தில் முதலில் முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. அப்போது மருத்துவ சேவை உள்ளிட்ட சில அத்தியாவசிய
சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஊரடங்கு படிப்படியாக
தளர்த்தப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்து பிற
பகுதிகளில் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்துக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், முழு ஊரடங்கை
மீண்டும் நாளை முதல் அமல்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக வாட்ஸ் அப்பில்
தகவல்கள் வெளியானபடி உள்ளன. சென்னையிலும் ஊரடங்கு கடுமையாக்கப்படும்
என்றும் தகவல்கள் பரவின. இந்த தகவல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர்
திறந்துவிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முழு
ஊரடங்கு அமல்படுத்தப்படாது எனவும், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு
என்று வெளியாகும் தகவல் வதந்தி எனவும் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...