தமிழகத்தில் மருத்துவப் படிப் பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் பழனி சாமியை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்த ஆணையத் தலை வர் பொன்.கலையரசன், பரிந்துரை அறிக்கையை வழங்கினார்.
இந்த அறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் விரைவில் கூடஉள்ள தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...