லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதல் யோகா பல்கலைக்கழகம்
இந்தியாவுக்கு வெளியே உலகின் முதலாவது யோகா பல்கலைக் கழகம் அமெரிக்காவின்
லாஸ் ஏஞ் சல்ஸ் நகரில் தொடங்கப்பட்டுள் ளது. இதற்கு விவேகானந்தா யோகா
பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. 6-வது சர்வ தேச யோகா தினத்தையொட்டி
(ஜூன் 21) இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. யோகா குறித்து இணைய வழியில் முதுகலை பட்டப்படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் வழங்கும்.
இதன் தொடக்க விழா, காணொலி காட்சி வழியாக நியூ யார்க்கில் உள்ள இந்திய தூதரகத் தில் நடைபெற்றது.
மத்திய வெளி யுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், வெளியுறவுத் துறை
நிலைக்குழு தலைவர் பி.பி.சவுத்ரி ஆகியோர் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி
வைத்தனர். இந்தியா வின் பிரபல யோகா குருவும் சுவாமி விவேகானந்தா யோகா
அனுசந்தான சம்ஸ்தானத்தின் வேந்தருமான எச்.ஆர்.நாகேந்திரா இந்த
பல்கலைக்கழகத்தின் முத லாவது தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முரளீதரன் பேசும்போது, ‘‘உலக சகோதரத்துவம்
பற்றி அமெரிக்கா வில் இருந்து போதனை செய்தவர் விவேகானந்தர். இந்த பல்கலைக்
கழகம் உலகுக்கு யோகா கலையை இன்னும் விரிவாக பரப் பும். மனதை
சமநிலைப்படுத்தவும் உணர்வுகளை ஸ்திரப்படுத்திடவும் உதவுகிறது யோகா’’
என்றார்.
இந்திய தூதரகம் மற்றும் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தயா ரிப்பு நிறுவன
அமெரிக்க கிளை யின் தலைவரும் விவேகானந்தா யோகா பல்கலை நிறுவன இயக் குநருமான
பிரேம் பண்டாரி ஆகி யோர் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். பிரேம் பண்டாரி பேசும்போது ‘‘இந்து மதத்தின் சிறப்புகளை 1893-ல் சிகாகோ
நகரில் ஆற்றிய உரை மூலம் உலகுக்கு பறைசாற்றி னார் சுவாமி விவேகானந்தர். 127
ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா வில் யோகா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பல் கலைக்கழகமானது யோகா பற்றி அறிவியல் பூர்வமாக விரிவான
ஆராய்ச்சியில் இறங்கி யோகாவை பிரபலப்படுத்தும்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...