அறி(வு)வியல்தந்த வரம் இந்த
தொடர்(பு) கல்வி சாலை
Dr.J.KOMALALAKSHMI
தொடர்(பு) கல்வி சாலை(ONLINE EDUCATION)
வருடம்2020!!
வந்ததே கொரோனா வைரஸ்
தந்ததே வகுப்பறைக்கு பூட்டு.
வைரஸ் வந்ததால்
சமூக விலகல் கட்டாயப்பாடமாகியது.
மனித தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
தொடர்பு துண்டிக்கப்பட்டால்
சக மனிதர்களோடு தொடர்பு துண்டிக்கப்பட்டால்
துயரம் வரும்
தனிமை வரும்
தொய்வு வரும்
மகிழ்ச்சியில்லா வாழ்கை வரும்!!
ஏன் மனஉளைச்சலில் மரணமே கூட வரும்
தொடர்ந்து தடைகள் வந்ததால்
தாண்டி செல்ல படி படி என்று பயில வைக்கும்
பள்ளிக்குப் பூட்டு போட்டிருக்கலாம் !!படிப்பதற்கல்ல!!
கல்விக்கூடங்களுக்கே பூட்டு
கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் அல்ல
தடைக்கற்களேயே தளங்களாய்
தொடர்பு தரும் தன்னம்பிக்கையாய்
தவழ்ந்து வீட்டிற்கே வருகிறது வாழ்க்கைக்கல்வி
தொடர்(பு )கல்வி சாலை ஒரு
வலிநிவாரணி!வரப்பிரச்சாதம்!
வாய்ப்பளிக்கும் விண்வெளி நட்சத்திரம்!
மின்ணனு சமுதாயத்தினை
இணைக்கும் சாலை!!
மக்களை மனிதநேயமுள்ள மனிதர்களாய்
மாற்றும் மாயாஜாலம்!!
மனிதகுலம் தழைத்திட
மனிதனே உருவாக்கிய
மின்ணுசாதனம்
தந்த சாலை இந்த
தொடர்(பு )கல்வி சாலை!!
வாருங்கள் தொடர்ந்து இணைந்து
சிகரம் தொடுவோம்
இந்த தொடர்(பு) கல்வி சாலையினால்!! Dr.J.KOMALALAKSHMI
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...