ஆக்ஷன் பிளாக்ஸ் - புதிய செயலி!
ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பெரியவர்களையே குழந்தைகள் விஞ்சி
விடுகின்றனர். வயதானவர்கள் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமில்லாமல் இருப்பதே
இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆகையால்தான் வயதானவர்கள் தொடுதிரையில்லாத பழைய
சாதாரண செல்லிடப்பேசிகளையே நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். உலகம்
முழுவதும் 6 கோடிக்கும் மேல் இதுபோன்ற பயன்பாட்டாளர்கள் உள்ளனர் என ஆய்வில்
தெரிவந்துள்ளது. வளர்ச்சியடைந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தில் அவர்களையும்
பங்குபெற வைக்கும் வகையில், கூகுள் நிறுவனம் "ஆக்ஷன் பிளாக்ஸ்' (Action Blocks)
எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.யாரையாவது தொடர்பு கொள்ள அவரது
செல்லிடப்பேசி எண்ணைத் தேடி அழைக்க வேண்டியதற்குப் பதிலாக, இந்தச் செயலி மூலம்
பிளாக் உருவாக்கி அந்த எண்ணையும், பெயரையும் இணைத்து ஸ்மார்ட் போனின் முதல்
திரையில் வைத்துவிட்டால்போதும். அந்த பிளாக்கைத் தொட்டவுடன் சம்பந்தப்பட்டவருடன்
பேசலாம். நமது தேவைக்கு ஏற்ப பிளாக்குகளை உருவாக்கி கொள்ளலாம்.
அதில், வீடியோ கால்,
குறுந்தகவல், வீடியோ- ஆடியோவை பிளே செய்வது, அலாரம் வைப்பது போன்றவற்றையும்
வீட்டில் உள்ள ஸ்மார்ட் பொருள்களையும் இணைத்து தனித்தனி பிளாக்குகளாகப்
பயன்படுத்தலாம்.
இதேபோல், "லைவ் டிரான்ஸ்கிரைப்' (Live Transcribe) செயலியில் செவி
திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு புதிய சேவையை கூகுள் தொடங்கி உள்ளது. மறுமுனையில்
பேசுபவரின் தொலைபேசி உரையாடலை ஸ்மார்ட் போனில் உடனடியாக எழுத்துவடிவமாக இந்த செயலி
மாற்றிக் காண்பிக்கிறது.
இதை அவர்கள் சேமித்து வைத்தும் படித்துக் கொள்ளலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் மாற்றுத்திறனாளி களுக்கு பயன்படும் வகையில் செயலிகளை
உருவாக்கும் கூகுளின் செயல் பாராட்டக் கூடியதே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...