அவசர தேவைக்கு மட்டும்...
தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில்
அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த
அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது
போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள்,
கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள்
மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம்.
ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும்.
பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு
பாதுகாப்பாக இருக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...