பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடப் பிரிவுகளில்,கணினி பயன்பாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக, கணினி ஆசிரியர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடப் பிரிவுகள் துவக்கப்படுகின்றன. மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்துடன் சேர்த்து, நான்கு முதன்மை பாடங்கள் இணைந்த பாடப்பிரிவுகள், ஏற்கனவே அமலில் உள்ளன. இதில், மாணவர்களுக்கான பாடச்சுமைகளை குறைக்கும் வகையில், முக்கிய பாடங்களை, மூன்றாக குறைத்து, புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இதில், கணினி பயன்பாட்டு பாடம் இடம் பெறவில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர், பரசுராமன் அறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கான, ஐந்து பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில், கணினி பயன்பாடு பாடம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்துக்கு, கணினியின் செயல்பாடுகளை, மாணவர்கள் அறிய வேண்டியது அவசியம். எனவே, முக்கிய பாடங்களுடன் கணினி பயன்பாடு பாடத்தையும் சேர்க்க வேண்டும்.
கலைப்பிரிவு மாணவர்கள், மற்ற பாடங்களுடன், கணினி பயன்பாடும் இணைந்த பிரிவை தேர்வு செய்ய, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...