Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்க உடலில் இருந்து இந்த மாதிரி வியர்வை வெளியேறுகிறதா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க...!

உங்க உடலில் இருந்து இந்த மாதிரி வியர்வை வெளியேறுகிறதா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க...!

வியர்வை என்பது நம் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான ஒன்று. இது நம் உடலின் நடக்கும் மிகவும் இயல்பான விஷயங்களில் ஒன்று. சூடாக இருக்கும்போது, பதட்டமாக இருக்கும்போது, பீதியில் இருக்கும்போது, மேலும் பலவற்றில் நமக்கு வியர்வை ஏற்படுகிறது. வியர்வை உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது மற்றும் வியர்வை சுரப்பிகளில் இருந்து உப்பு சார்ந்த திரவத்தை விடுவிப்பதாகும். சாதாரண அளவுகளில் வியர்த்தல் என்பது ஒரு அத்தியாவசிய உடல் செயல்முறை. பொதுவாக அக்குள், கைகளின் உள்ளங்கைகள், கால்கள், முகம் மற்றும் கால்களிலிருந்து வெளியேறுகிறது.

சாதாரண வியர்வை நன்கு செயல்படும் உடலைக் குறிக்கும்போது, குறைவாக வியர்த்தல் மற்றும் அதிக வியர்வை இரண்டுமே பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உடல் ரீதியாக விட உளவியல் ரீதியாக அதிகமாக வியர்த்தல் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் மற்றும் அதிக வெப்பம் ஏற்படும் அபாயம் இருப்பதால் வியர்வை இல்லாதது ஆபத்தானது. வியர்த்தல் எவ்வாறு இயங்குகிறது அல்லது ஏன் நமக்கு வியர்க்கிறது? வியர்த்தல் என்பது அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
 
நமக்கு ஏன் வியர்க்கிறது?
நம் உடலை குளிர்விப்பதைத் தவிர, நம் உடல் வியர்வையை உருவாக்கத் தொடங்க பல காரணங்கள் உள்ளன. உங்கள் உடல் அதிக வெப்பமடைவதை உணரத் தொடங்கும் போது, அதன் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக நமக்கு வியர்க்கத் தொடங்குகிறது. மனித உடலில் சராசரியாக மூன்று மில்லியன் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இது இரண்டு வகையான வியர்வை சுரப்பிகளாக வகைப்படுத்தப்படுகிறது: எக்ரைன் மற்றும் அபோக்ரைன்.

எக்ரைன் வியர்வை சுரப்பிகள்

இந்த வியர்வை சுரப்பிகள் உங்கள் உடல் முழுவதும் அமைந்துள்ளன. இது இலகுரக, மணமற்ற வியர்வையை உருவாக்குகின்றன.
 
அபோக்ரைன் வியர்வை சுரப்பிகள்

இவை உச்சந்தலையில், அக்குள் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் வளர்ந்திருக்கும் முடிகளில் அமைந்துள்ளன. அபோக்ரைன் சுரப்பிகள் ஒரு கனமான, கொழுப்பு நிறைந்த வியர்வையை வெளியிடுகின்றன. இது ஒரு தனித்துவமான வாசனையை (உடலில் நாற்றத்தை) உருவாக்குகிறது. இது அபோக்ரைன் வியர்வை உடைந்து உங்கள் தோலில் உள்ள பாக்டீரியாவுடன் கலக்கும்போது உருவாகிறது.

எவ்வாறு வியர்வை வெளியேறுகிறது?

உங்கள் உடலில் உள்ள தானியங்கி நரம்பு மண்டலம் வியர்த்தல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. வானிலை வெப்பமாக இருக்கும்போது அல்லது உடற்பயிற்சி அல்லது காய்ச்சல் காரணமாக உங்கள் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, உங்கள் தோலில் உள்ள குழாய்கள் வழியாக வியர்வை வெளியேறும், இது உடலின் மேற்பரப்பை ஈரமாக்கி உங்களை குளிர்விக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive