பட்ஜெட்டில் புதிய வரி நடை முறையை நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய வரி நடைமுறை யானது குறைந்த
வரி விதிப்பு நடைமுறையாக அறிமுகப்படுத் தப்பட்டது. ஆனால், இந்தப் புதிய வரி
நடைமுறையில் முன்பு வழங் கப்பட்டு வந்த பல வரி விலக்கு சலுகைகள்
நீக்கப்பட்டன.தற்போது பயணப்படிக்கான வரி சலுகை அனுமதிக்கப்பட்டுள் ளது.
அதன்படி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணச் செலவு களுக்கான படி, சுற்றுலா
பயணத் துக்கான செலவுகள், பணியிட மாறுதலுக்கான பயண செலவுகள், வேலை
நிமித்தமான பயணச் செலவுகள் போன்றவற்றுக்கு வரி விலக்கு கோரலாம் எனத்
தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும் பயணங் களின் போது ஆகும் இதர செலவு களும் நிறுவனம் வழங்கும்பட்சத் தில் அதற்கும் வரிவிலக்கு கோர லாம்.ஆனால், அலுவலகத்தில் இல வச உணவு, தேநீர் போன்ற பானங் களுக்கான செலவுகள் இதில் சேர்க் கப்பட மாட்டாது எனவும்அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் பிற மாற்றுத் திறனாளி ஊழியர்கள் கூடுதலாக மாதம் ரூ.3,200 வரை வரி விலக்குப் பெற முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...