பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேர்வுத்துறை அலுவலகம் தற்போது கதிகலங்கி போய் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வுத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியான நிலையில், அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்வுத்துறையின் இணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அதிகாரிகள்மத்தியில் பீதி கிளம்பியது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக அந்த துறையின் இயக்குனருக்கும் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறி சில நாட்களாக இருந்து வந்தது. அவர் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கும் கொரோனா இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...