வழிகாட்டுதல்களை வெளியிட்டது போக்குவரத்து துறை
கரோனா ஊரடங்கு தளர்வால் தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்
களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அரசு பேருந்துகள் இன்று முதல்
இயக்கப்படுகின்றன. இந் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொள்ள வேண்
டிய முன்னெச்சரிக்கை குறித்து போக்குவரத்துத் துறை வழிகாட்டு தல்களை
வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப் பினும், ஊரடங்கில்
தளர்வு அளிக் கப்பட்டு, சென்னை உட்பட 4 மாவட் டங்களை தவிர, மற்ற மாவட்டங் களில்
50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில், 60 சதவீத பயணிகளை
ஏற்றிச் செல்ல வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் மொத்தம் 8
ஆயிரத் துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர, 3
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயங்க உள்ளன.
இந்நிலையில் பல்வேறு வழி காட்டு முறைகளை கடைபிடிக்க தமிழக உத்தரவிட்டுள்ளது. இது
குறித்து நேற்று வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த
வேண்டும். குளிர்சாதன பேருந்து களில் ஏசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்.
பின் படிக்கட்டு கள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்க வேண்டும். பேருந்து
ஓட்டுநர், நடத்துநர் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே பணிக்கு அனுமதிக்க
வேண்டும்.
மண்டலத்துக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை. அதேநேரம்,
பிற மண்டலங்களுக்கு செல்வோருக்கு அறிகுறி இருந் தால் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள
வேண்டும். உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை பயணச்சீட்டு பரிசோத கர்கள்
பரிசோதித்து உறுதி செய் வார்கள். சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும்
அனை வருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம். பேருந்துகளில் பயணி கள் அனைவரும்
கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மாதாந் திர பாஸ்களை ஊக்குவிக்க வேண் டும்,
டிஜிட்டல் முறையில் கட்டணம் பெறும் வசதியை படிப்படியாக ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முகக் கவசம், கையுறை
இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழக அரசின்
வழிமுறை களைப் பின்பற்றி பேருந்துகளை இயக்கவுள்ளோம். ஓட்டுநர்கள்,
நடத்துநர்களுக்கு ஒரு லட்சம் முகக் கவசங்கள், கை கழுவும் திரவங்கள், கையுறைகள்
உள்ளிட்டவற்றை வழங்கவுள்ளோம். பயணிகள் கட் டாயம் முகக் கவசம் அணிந்து வர
வேண்டுமென அறிவுறுத்து கிறோம்’’ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...