கடன் தவணை 6 மாதங்கள் தள்ளிவைப்பு வட்டிக்கு வட்டி விவகாரத்தில் 3 நாளில்
முடிவெடுக்க வேண்டும் ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தல்
கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் சூழலில்,
இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மார்ச் 25
முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ஊரடங்கினால் ஒட்டுமொத்த பொருளாதாரமும்
பாதிக்கப்பட்டது.
தொழில்கள் முடங்கின. நிறுவனங்கள் பலவும் ஊதியக் குறைப்பு,
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் மக்களிடம் பணப்புழக்கம்
குறைந்துள்ளது.இச்சூழலில் கடன் வாங்கியவர் களின் சுமையைக் கருத்தில் கொண்டு மத்திய
அரசு கடன் தவணை செலுத்துவதை முதலில் 3 மாதங்கள் தள்ளிவைக்கும் வசதியை வழங்கியது.
தற்போது மேலும் 3 மாதங்களுக்கு (ஆகஸ்ட் வரை) இந்த வசதி வழங்கப்படும் என வங்கிகள்
கூறியுள்ளன. இந்நிலையில் 6 மாதங்களுக்கு கடன் தவணையைத் தள்ளி வைக் கும் வசதியை கடன்
வாங்கியவர் கள் பயன்படுத்தினால், அந்த 6 தவணைகளுக்கு வட்டி செலுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கடன் தவணை தொகையும், வட்டி யும் செலுத்த வேண்டிய மொத்த கடன்
தொகையோடு சேர்க்கப் படுவதாகவும் தெரிகிறது.
இதனால் கடன் வாங்கியவர்களுக்கு அதிக
கடன் சுமை ஏற்படுமே தவிர, எந்த வகையிலும் பலன் தராது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்
தில் கஜேந்திர ஷர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கள் அசோக் பூஷன், சஞ்சய்
கிஷான் கவுல் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்து, ‘‘கடன் தவணை
தள்ளிவைப்பு மீது வட்டி வசூலிப்பது குறித்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் 3
நாட்களுக்குள் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி உள்ளது.
மேலும் “கடன் தவணை தள்ளி வைப்பு காலத்துக்கான வட்டியை முழுமையாக நீக்க வேண்டும்
என்று கூறவில்லை. மாறாக வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கை குறித்துதான் கேள்வி
எழுப்பப்படு கிறது என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. வட்டிக்கு வட்டி வசூலிப்பது
நீக்கப்பட வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் எனவும் கூறியுள்ளது.
ஏற்கெனவே, நீதிமன்றம் இந்த கடன் தள்ளிவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பதை தவிர்ப்பது
குறித்து விவாதித்தது. இந்த விஷயத்தில் 2 கோரிக்கைகள் உள்ளன. ஒன்று கடன் தவணை
தள்ளிவைப்பு காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, இரண்டாவது வட்டிக்கான
வட்டியை தள்ளுபடி செய்வது என்று நீதிமன்றம் கூறியது.
இதற்கு வட்டி வசூலிக்கக்
கூடாது என்று கட்டாயப்படுத்துவது வங்கிகளின் நிதி ஆதாரத்தைப் பாதிக்கும் என ரிசர்வ்
வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கடன் தவணை தள்ளிவைப்பு
காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து 3 நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு
தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் உச்ச நீதிமன்றம்
கேட்டுக் கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...