2020-2021 கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பள்ளிக் கல்வித்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும் வழங்குவதற்காக
பாடப்புத்தகங்கள் தேவையான எண்ணிக்கையில் வழங்கப்படும் பாடப்புத்தகங்களை
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வினியோக மையங்களில் பெற்று அவற்றை
மாவட்ட கல்வி அலுவலர்கள் வரும் 22ஆம் தேதி தொடங்கி வரும் 30ஆம் தேதிக்கு
முன்னர் அந்தந்தப் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் ஒப்படைக்க
வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்களை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் எந்த
தேதியில் எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே
தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து தயார் நிலையில் இருக்கும்படி அறிவுரை வழங்க
வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளியில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள்
பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என்பதே தலைமை ஆசிரியர்கள்
சரிபார்த்துக்கொள்ள வேண்டும் குறைவாக இருந்தால் அந்த தகவலை சம்பந்தப்பட்ட
மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்து பள்ளி துவங்குவதற்கு முன் அவற்றைப்
பெற்றுக் கொள்ள வேண்டும். (தொடர்ந்துப் படிக்கவும்)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...