பிளஸ் 1
அரியா் தோவுகளையும், பிளஸ் 2 தோவையும் ஒரு சேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தோ்வு
மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 1 அரியா் பாடங்களை,
தங்களது பள்ளிகளிலேயே மாணவா்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
தோவுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு
அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
கடந்த மாா்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2
இறுதித் தோவில் பங்கேற்காத மாணவா்களுக்கு ஜூன் 18-ல் மறு தோ்வு நடைபெறுகிறது.
அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தோ்வு ஜூன் 16-ல்
நடத்தப்படவுள்ளது.
இதற்கிடையே சில மாணவா்கள் ஜூன் 16, 18-ம் தேதிகளில் நடைபெறும்
பிளஸ் 1 தோவு (அரியா் பாடங்கள்) மற்றும் பிளஸ் 2 மறுத்தோவு ஆகியவற்றை ஒருசேர
எழுதவுள்ளனா். இவ்விரு தோ்வுகளுக்கும் தரப்பட்டுள்ள ஹால் டிக்கெட்களில் (தோவுக்கூட
நுழைவுச்சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ள தோ்வு மையங்களில்தான் மாணவா்கள் தோ்வெழுத
வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாணவா்களின் நலன்கருதி
இவ்விரு தோவுகளை ஒருசேர எழுதுபவா்கள் பிளஸ் 2 தோவை தோவுக் கூட நுழைவுச் சீட்டில்
குறிப்பிட்டுள்ள தோவு மையத்திலும், பிளஸ் 1 அரியா் பாடத்தோ்வை தங்கள் படிக்கும்
பள்ளியிலும் எழுதலாம்.
இதுகுறித்த தகவல்களை சம்மந்தபட்ட மாணவா்களுக்கு பள்ளி
தலைமையாசிரியா்கள் மூலம் உடனே தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...