பிளஸ் 1ல் விடுபட்ட வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும்
புவியியல் பாட தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், 'அரியர்'
எழுத காத்திருந்த பிளஸ் 2 மாணவர்களின் பட்டியலை கல்வித்துறை தயாரித்து
வருகிறது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒரு மாணவன் குறிப்பிட்ட பாடங்களில்
தோல்வி அடைந்தாலும், மேற்கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி
பெறலாம். இருப்பினும், தோல்வியடைந்த பிளஸ் 1 பாடத்தை மீண்டும் தேர்வெழுதி
தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்
வினியோகிக்கப்படும்.இதன் அடிப்படையில், 2019 -20ம் கல்வியாண்டில் பிளஸ் 2
படிக்கும் மாணவர்களில், சிலர் கடந்த, 2018- 19ம் கல்வி யாண்டில் பிளஸ் 1ல்
தோல்வி அடைந்திருப்பர்.இவர்கள் நடப்பாண்டு பிளஸ் 1 தேர்வையும், பிளஸ் 2
தேர்வையும் ஒருசேர எழுத காத்திருந்திருப்பர். கொரோனாவால், பிளஸ் 1 தேர்வு
வேதியியல், கணக்குபதிவியல் மற்றும் புவியியல் தேர்வு ரத்தாகிவிட்டது. பிளஸ்
2 வேதியியல், கணக்குபதிவியல் மற்றும் புவியியல் தேர்வு நாள் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 கடைசி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும்,
பிளஸ் 1 மதிப்பீடு தேவைப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக்
பள்ளிகளில், 2018 - 19ம் கல்வியாண்டில், பிளஸ் 1 வேதியியல்
கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களில் தோல்வி யுற்ற மாணவர்களின்
விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இவர்களின் வருகைப்பதிவேடுகள் ஆய்வு
செய்யப்பட்டு வருவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...