அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் நடத்தும் ‘மாற்றத்துக்கான தொழில்நுட்பம் -
கோவிட் 19 சவால்’ போட்டிக்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்
அமிர்தா விஷ்வ
வித்யாபீடம் பல்கலைக் கழகத்தின் அங்கமான அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘மேத்
ஒர்க்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘மாற்றத் துக்கான தொழில்நுட்பம் - கோவிட் 19
சவால்’ (‘டெக் ஃபார் சேஞ்ச் - கோவிட்-19 சேலஞ்ச்’) என்ற பெயரில் 10, 11, 12-ம்
வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான போட்டியை நடத்துகிறது.
கரோனாவால் இக்கட்டான சூழலை
எதிர்கொண்டுள்ள மனிதகுலத்துக்கு நல்ல தீர்வுகளை உருவாக்கித் தருவதே இப்போட்டியின்
நோக்கம். கரோனா வைரஸ் பரவலை முன்கூட்டியே கணித் துக் கூறுவது,வைரஸ் இருப்பதை
கண்டறிவது, இதற்கு தகுந்த தீர்வை கூறுவது ஆகிய 3 மையக் கருத்துகளுடன் இப்போட்டி
நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக, உரிய தலைப்பு, விளக்கப் படத்துடன் தங்களது தொழில்
நுட்பத் திட்டத்தின் மையக் கருத்தை பதிவு செய்ய வேண்டும்.இதற்கு
விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. இதில்
தேர்வு செய்யப்படுவோர் தங்கள் தொழில்நுட்ப திட்டத்தை ‘மேத் ஒர்க்ஸ்’ நிறுவனத்தின்
‘மேட்லேப்’ மென்பொருள் உதவியுடன் வடிவமைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதியாக
தேர்வு செய்யப்படும் திட்டம், முன்னோடி திட்டமாக ‘ஆஷா’ சமுதாய சுகாதார பணியாளர்கள்
மூலமாக கரோனா ஒழிப்பு பணியில் செயல் படுத்தப்படும். இதுகுறித்து மேலும் விவரங் களை
இணையதளத்தில் (https://www.amrita.edu/covidchallenge) அறிந்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...