பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஒவ்வொரு மாணவர்களும் வாழ்க்கையில் அடுத்த
கட்டத்தை நோக்கி நகரப் போற நேரம் இது. அடுத்து என்ன படிக்க போற ? எந்தக்
கல்லூரியில சேர போற ? இப்படி நம்மளச் சுத்தி இருக்குறவங்க கேள்விமேல கேள்வி
கேட்டு நம்மள திக்குமுக்காட வச்சுட்டு இருப்பாங்க. 12ம் வகுப்பு முடிச்ச
மாணவர்களே.!! அடுத்து என்னங்க படிக்க போறீங்க..??
12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே.!!
அடுத்து என்னங்க படிக்க போறீங்க..?? அவங்க கேக்குறதுக்கு முன்னாலயே நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சுருப்பீங்க. பிள்ளைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்ற தேடுதலை பெற்றோர்களும் ஆரம்பித்திருப்பார்கள். இவர்களுக்கு உதவும் வகையில், என்னென்ன கல்லூரிப் படிப்புகள் உள்ளன என்பது குறித்து பாக்கலாம் வாங்க. அறிவியல் பிரிவு மாணவர்களுக்களே..! அறிவியல் பிரிவு மாணவர்களுக்களே..! மருத்துவ அறிவியல் பிரிவு, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ், பி.பார்ம், பிபிடி, பிஎச்எம்எஸ், நர்சிங், பிஎஸ்சி ஆப்டோமெட்ரி, பிஎஸ்சி இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி துணைநிலை மருத்துவ அறிவியல்கள். இவை தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பயோமெடிக்கல், தாவரவியல், கணினிகள், உணவு தொழில் நுட்பம், மண்ணியல், ஹோம்சயின்ஸ், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் படிப்புகள், கால்நடை பராமரிப்பை உள்ளடக்கிய வேளாண் படிப்பு, கால்நடை அறிவியல் போன்ற படிப்பு மேற்கொள்ளலாம். அறிவியல், வணிகம் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களே..
அறிவியல், வணிகம் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களே..
வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் உங்களுக்கு விருப்பமான படிப்பில் விரைவான சேர்க்கையை பெறுவீர்கள். அறிவியல் பிரிவானது முக்கியமாக பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் பிரிவுகளில் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆனால் அப்படிப்புகளில் சேர்வதற்கு நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி முக்கியமானதாகும். அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் நடத்தும் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
தொழிலா.. தொழில்சாரா..
இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். "அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எவ்வளவு செலவாகும்... போன்ற கேள்விகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே இருக்கும். ஒரு மாணவனுக்கு ப்ளஸ் டூ மதிப்பெண் தேர்வு முடிவுகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது ப்ளஸ் டூ வகுப்புக்குப் பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதுகுறித்து எடுக்கும் முடிவு. இந்த முடிவை, தெளிவாக எடுக்க வேண்டும். வாய்ப்பளிக்கும் டிப்ளமோ..
வாய்ப்பளிக்கும் டிப்ளமோ..
கலை மற்றும் வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளின் வாயிலாக பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் என்ன படிப்பை படித்தாலும் பல நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கும் போட்டித்தேர்வுகளை எழுதுவது மிக முக்கியம். உங்களின் படிப்பை தேர்வு செய்கையில் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். என்ன படிக்கலாம்?
BGR India என்ன படிக்கலாம்?
பொறியியல் துறையில் கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மெட்டலார்ஜிக்கல், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பாலிமர் இன்ஜினியரிங், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பொறியியல் துறை வாய்ப்புகள்:
திறமையான மாணவர்களுக்கு பொறியியல் என்பது பிரகாசமான, எப்போதும் பணிவாய்ப்புகளை வழங்கும் துறையாக உள்ளது. ஆனால் இன்று அதிகரித்து வரும் பொறியியல் கல்லூரிகளில் அங்கீகாரம், தரம் குறித்து நன்கு ஆய்வு செய்து சேர்வது முக்கியம். மேலும், பொறியியல் படிப்பை பொருத்தவரை செகண்டரி பீல்டை விட பிரைமரி பீல்டை தேர்வு செய்வதே சிறந்தது. சட்டம் படிக்கலாம் ? சட்டம் படிக்கலாம் ? இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மாணவர்களின் பார்வை சட்டத்துறையின் மீது திரும்பியுள்ளது. ஆனால், அந்த துறையில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும் என்பது குறித்த தெளிவான முடிவு இல்லை. பெரும்பாலான சட்ட மாணவர்கள் இளநிலை படிப்பை முடித்தாலே பணி வாய்ப்புகளை பெற்றுவிடலாம் என நினைப்பது தவறு. வணிக பிரிவு மாணவர்களுக்காக..
வணிக பிரிவு மாணவர்களுக்காக..
சிபிடி (காமன் ப்ரொஃப்சின்சி டெஸ்ட்) என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சிஏவில் சேர முடியும். படித்துக் கொண்டிருக்கும் போதே பலதரப்பட்ட அரசு பணிகளுக்கு முயற்சிக்கலாம். அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படித்தால் பணி செய்து கொண்டே படிக்கலாம். சாட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் கல்வி நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி சிஏ வாய்ப்பு பிபிஏ மற்றும் பிபிஎம், பிகாம், பிஏ எக்னாமிக்ஸ், பி.ஏ ஜெர்னலிசம், பிஎஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்பினை தேர்வு செய்வது சிறந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...