12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 24 ஆம் தேதி முடிவடைந்தது.
ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் தேர்வின் இறுதி நாளில் 34 ஆயிரம் பேர் தேர்வு
எழுத முடியாமல் போனது.
இந்நிலையில் ஏற்கனவே முடிந்த தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணி மே
27 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. வழக்கமாக விடைத்தாள்
திருத்தும் பணி முடிவடைந்த 10 நாட்களில் முடிவுகள் வெளியாகும்.
ஆனால் இந்த ஆண்டு தேர்வு இறுதி நாளில் தேர்வெழுத முடியாது போனவர்ககுக்கு
மறு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில்
தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து
தேர்வுத்துறை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...