கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம்
வகுப்பில் 98 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில்
வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு காலாண்டு தேர்வில் தமிழ் மற்றும் அறிவியல்
பாட விடைத்தாள்கள் தொலைந்து போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள்,
மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் இட வேண்டும் எனக்கூறி, மாணவிகளை பள்ளிக்கு
அழைத்து வருமாறு தெரிவித்தனர்.
அதன்பேரில் நேற்று 15 மாணவிகளும் பெற்றோரும் வந்தனர். அப்போது, பள்ளி
வளாகத்தில் தனியார் டியூசன் சென்டரில் மாணவிகளை மட்டும் அனுமதித்தனர்.
சிறிதுநேரத்தில், அவர்களுக்கு விடைத்தாள்கள் கொடுத்து தேர்வு எழுத
வைத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற செய்தியாளர்கள், ஆசிரியரிடம் கேட்டபோது,
‘மாணவிகளின் காலாண்டு தமிழ் மற்றும் அறிவியல் விடைத்தாள்கள்
தொலைந்துவிட்டது. அதற்காக மாணவிகளை வைத்து தேர்வெழுதி வருகிறோம்’ என்று
விளக்கமளித்தனர்.
same in dharmapuri school
ReplyDelete