தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சேலம்
மாவட்டத்தில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடத்தினை நிரப்பிடுவற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்பட்ட பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சேலம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : எழுத்தர்
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 35, பிற்படுத்தப்பட்டோர் 32, பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.22,900 முதல் ரூ.50,400 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Salem.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 17.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Salem.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...