இந்த லொக்டவுன் காலத்தில் ஸ்கைப் அப்பிளிக்கேஷனை பின்னுக்கு தள்ளி முன்னணியில் திகழ்கின்றது Zoom அப்பிளிக்கேஷன்.
வீடியோ கொன்பரன்ஸ் நோக்கத்திற்காக இந்த அப்பிளிக்கேஷனை பல்வேறு துறையினர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷன் பயனர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஏற்கணவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இப்படியிருக்கையில் எவ்வாறான காரணங்களுக்காக குறித்த அப்பிளிக்கேஷன்
பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
அவற்றை இங்கே பார்க்கலாம்,
- Broadcast Audience Research Council (BARC) நடாத்திய வீடியோ கொன்பரன்ஸிங் ஹேக் செய்யப்பட்டிருந்தமை.
- அங்கீகாரம் அளிக்கப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொள்பவர்கள் மற்றையவர்களுக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் நடந்தகொள்ளக்கூடியதாக இருத்தல்.அழைக்கப்படாதவர்கள் (Uninvited) கலந்துரையாடலில் கலந்துகொள்ளக்கூடியவாறு காணப்படுதல்.
- இதனைப் பயன்படுத்தி Denial-of-Service (DoS) முறையிலான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
- ரெக்கோடிங் வசதி மூலம் இரகசியம் காக்கப்படக்கூடிய தகவல்கள் கசியக்கூடிய சாத்தியம் காணப்படுதல்.
- End-to-End முறையிலான Encryption வழங்கப்படாதிருத்தல்.
- தவிர மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்களை கசியச் செய்தமை தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளமை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...