முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள்
முழுவதும் தேர்வெழுத தடைவிதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி உத்தரவை
வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரில் 199 பேர் தவறான முறையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றதாக அறியப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடைவிதிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
* அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
*இதன்படி, 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 ஆயிரம் பேருக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
*இந்த தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதனிடையே தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 199 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.
*இதையடுத்து விசாரணை நடத்தியதில் 199 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக பெற்று இருப்பது தெரிய வந்தது. 199 பேர் பல லட்சம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது விசாரணையில் உறுதி ஆகியது.
* டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடுகள் வெளிவந்த அந்த சமயத்தில்பாலிடெக்னிக் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
* 199 பேர் அதன் அடிப்படையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தேர்வர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது.
* இவ்வாறான சூழலில்,2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத ஆசிரியர் தேர்வு வாரியம் தடை விதித்துள்ளது.

Same like that many of the teacher involved in malpractice during csc pg trb exam.. Trb should take action against those people
ReplyDeleteI hope the same action should follow in pg trb csc department too.. many of the teacher copied and asking the answer too in online exam.. government should punish those people
ReplyDelete