21.03.2020 தேதியிட்ட தமிழக முதலமைச்சரின்
அறிவிப்பின்படி , கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஏற்கனவே , 27.03.2020 முதல் 13.04.2020
வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் | ஏப்ரல் 2020 பருவத்திற்கான
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த
மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகளான வேதியியல் , கணக்குப் பதிவியல் மற்றும்
புவியியல் பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது .
மேலும் , 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளான வேதியியல் , கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுத இயலாத தேர்வர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது . தற்போது ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதாத தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . இக்கால அட்டவணைகளை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...