ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான முதுநிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
JEE நுழைவு தேர்வு முதன்மை முதுநிலை தேர்வுகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது
இந்த தேர்வு முதல்நிலைத் தேர்வுக்கான தகுதித்தேர்வு ஆகவும் கருதப்படுகிறது. முதன்மை தேர்வு ஜூலை 18 ஆம் தேதி முதல் ஜூலை 23 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
முதல் நிலை தேர்வு வருகிற 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது ஆனால் காேரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...