அனைத்து வகை ஆசிரியர்களும் 21.05.2020க்குள் தங்களது
பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு வந்து இருக்க வேண்டும் என
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
ஜுன் 1 முதல் நடைபெறவுள்ள 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உடன் தெரிவித்திட வேண்டும்.
அரசு , உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020 - ற்குள் வந்து இருக்க வேண்டும்.
அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.
காலை 10 - ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தற்போது தான் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங்கிய பள்ளி குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டும். அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது இருப்பின் அதன் விவரங்களை நாளை ( 16.05.2020 ) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு , அவர்களுக்கு tn e - pass ஆன்லைன் வழியாக உடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...