சேலம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி சேலம் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரங்கள் கோருதல் தொடர்பாக ஆணை.
சேலம் மாவட்டத்தில் ஜூன் - 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் சார்ந்த பணிகளுக்கு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களை பயன்படுத்திட மேற்காண் பார்வையின்படி நடைபெற்ற கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகளுக்கு பயன்படுத்திடும் வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 18.05.2020 பிற்பகல் 02.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று தொகுத்து 18.05.2020 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...