Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை தெரிவிக்க CEO உத்தரவு.

உயர்திரு பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோர்களின் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறைகள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது . அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பபள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. அனைத்து பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்பட உள்ளதால் , ஏற்கனவே 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு மையமாக உள்ள தேர்வு மையங்கள் முதன்மை தேர்வு மையமாகவும் , அத்துடன் உள்ள இணைப்பு பள்ளிகள் துணை தேர்வு மையமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

2. ஜூன் 1 முதல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்பதால் மாணவர்களுக்கு உடனடியாக அவர்கள் பயின்ற பள்ளி தேர்வு மையமாக செயல்படும் என்பதை தெரிவிக்கவேண்டும்.

3. ஜூன் 2 ம் தேதி அன்று நடைபெறவுள்ள 11 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதை மாணவர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும்.

4. 24.03.2020 அன்று நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வருகை தராத மாணவர்களுக்கு ஜூன் 4 அன்று ஏற்கனவே தேர்வு எழுதிய பழைய தேர்வு மையத்திலேயே தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படவேண்டும்.

5. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பழைய தேர்வு கால அட்டவணையில் கணக்கு பாடத்திற்கான தேர்வு இறுதி நாள் தேர்வாக உள்ளது. ஆனால் , ஜூன் 1 முதல் நடைபெறும் புதிய தேர்வு கால அட்டவணையில் கணக்கு பாடத்திற்கான தேர்வு 05.06.2020 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக வருகிறது. எனவே மாணவர்களுக்கு இதை அறிந்துக்கொள்ளும் வண்ணம் வலியுறுத்தி மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டும்.

6. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் . எனவே , தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ( 10 மாணவர்களுக்கு ஒரு அறை வீதம் ) போதிய அறைகள் மற்றும் இருக்கை வசதிகள் இருக்கிறாதா என உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் . அறைகள் மற்றும் இருக்கை வசதிகள் பற்றாக்குறை இருப்பின் உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

7. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ( Containment Zone ) வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் ( Special Exam Centre ) அமைக்கப்பட வேண்டும் என்பதால் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ( Containment Zone ) வசிக்கக்கூடிய மாணவர்களாக இருப்பின் அவர்களுடைய விவரம் சேகரிக்கப்பட்டு மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

8. துணைத்தேர்வு மையங்களில் 10 ம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்குரிய முகப்புத்தாட்களுடன்கூடிய முதன்மை விடைத்தாட்களை முதன்மைத் தேர்வு மையத்திலிருந்து பெற்று துணை தேர்வு மையமாக செயல்படும் பள்ளியில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

9. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக வெளிமாவட்ட வெளி மாநிலம் சென்ற மாணவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து அவர்கள் E - PASS பெற்று தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வரவேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் . அவர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டாலோ அல்லது E - PASS பெறுவதில் சிரமம் ஏற்பட்டலோ , உடனடியாக மாவட்டக்கல்வி அலுவலர்கள் முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும் . இது குறித்த விவரத்தினை ஏற்கனவே அனுப்பப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்ப வேண்டும்.

10. பள்ளிக்கல்வி துறை , மெட்ரிக் பள்ளியில் பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்களும் தேர்வு பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள் என்பதால் அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் மெட்ரிக் உட்பட ) பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் . மேற்படி ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் E - PASS பெற்று பணிபுரியும் மாவட்டத்திற்கு 21.05.2020 க்குள் வருகை புரிய வேண்டும்.

11. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பு அறைகள் , இருக்கைகள் சுத்தம் செய்து துய்மையானதாகவும் , சுகதாரமாதகவும் வைத்திட தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12. தேர்வு மையம் செயல்படும் பகுதியின் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி ஆகிய அலுவலர்களை தொடர்பு கொண்டு அப்பகுதிகளின் தூய்மை பணியாளர்களின் உதவியுடன் தேர்வு மையத்தினை தேர்வு தொடங்குவதற்கு முந்தைய தினம் மற்றும் தேர்வு நடைபெறும் ஒவ்வொறு நாளும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் மற்றும் சுத்தம் செயப்பட வேண்டும்.

13. கழிப்பறைகள் சுத்தம் செய்து தூய்மையானதாகவும் , சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என அனைத்து தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

14. தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு வருகை புரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருத்தல் வேண்டும் . மேலும் , கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த போதிய அளவு சானிடைசர் மற்றும் சோப்பு இருப்பு வைத்துக்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

15. பத்தாம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் குழு மூலமாக தொடர்புக் கொண்டு தான் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் . அவ்வாறு இல்லை எனில் Tn - e pass பெற்று தேர்வு எழுத வருவதற்கு அனைத்து தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

16 , 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு சார்ந்த பாட ஆசிரியர்கள் ஆன் - லைன் மூலமாக தேர்வுக்கு பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

17. தொடக்க கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive